Our Blog

எங்கள் வலைப்பதிவில்

என் தேவனே என் பெலன்

Posted on May 01, 2016 01:19:35

 INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

 வாசகம்: மீகா 7:7

“நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.”


பொறுமையோடு ஓடக்கடவோம்

Posted on May 01, 2016 01:17:50

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: 2 பேதுரு 3:3-14  2 தீமோத் 4:7-8

கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைக ளின்படியே நடந்து, இயேசு வருவார் என்று சொல்லுகிற வாக் குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். இந்தப் பரிகாசக்காரரை கண்டு எவ்வளவேனும் மனம் தளர்ந்து போகாதிருங்கள்.


நீரே என்னை கட்டுகிறீர்

Posted on April 26, 2016 01:25:03

INTO A NEW DAY - DAILY DEVOTION, GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA        

வாசகம்: மீகா 7:8

“என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.”

கர்த்தர் எங்கள் கிரியைகளை அறிந்திருக்கிறார். அவருடைய கண்கள் பூமியை நோக்கிப் பார்க்கின்றது. அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளை அறிந்தவர். தன்னுடைய பிள்ளைகள் இயேசுவின் பரிசுத்த இரத்தத்தினால் கழுவப்பட்டு, வெண் வஸ்திரம் தரித்து, தன்னோடு நடக்கும்படி விரும்புகிறார். சத்துருவானவன் எங்கள் நீதியின் வஸ்திரத்தை அசுசிப்படுத்தும்படி எங்களுக்கு விரோதமாயிருக்கிறான்.


நற்கிரியைகளின் பலன்

Posted on April 26, 2016 01:23:16

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: வெளி 22:12, ஏசா 43:2, 1 கொரி 10:13, ரோமர் 2:6-7,

 உபத்திரவத்தின் மேல் உபத்திரவம், எப்பக்கமும் நெருக்கப்பட்டிருக் கின்றேன், நடுக்கடலில் கொந்தளிக்கும் அலைகள் நடுவே விடப்பட்ட கப்பலைப் போல என் வாழ்க்கiயின் சூழ்நிலை இருக்கின்றது என சிலர் சொல்லிக் கொள்ளுவார்கள். இவ்வனுபத்தை யாவரும் சில கட்டங்களில் கடக்க நேரிடுகின்றது.


மனப்பாரங்களிலிருந்து விடுதலை

Posted on April 26, 2016 01:21:10

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: மத்தேயு 8:25

“அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.”

சிருஷ்டிகரோடு இருந்தவர்களே பயந்து நடுங்கினார்கள். காரணம், அற்பவிசுவாசம். அவர்களிடத்தில் பூரண விசுவாசம் காணப்படவில்லை. அமிழ்ந்து போகிறோம் கர்த்தாவே, எனது வாழ்க்கையில் மட்டுமே புயல், எனக்கு மட்டுமே கடன், நோய், தனிமை, நோவு, வழி தெரியவில்லையே என அங்கலாய்க்கிறோம்.


ஒரு நன்மையும் குறைவுபடாது

Posted on April 23, 2016 15:56:33

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: சங்கீதம் 37: 7-11 பிலிப்பியர் 4:19

தாவீது என்னும் ராஜா பல இக்கட்டிற்கூடாக கடந்து சென்ற போதிலும், தேவனுடைய சமூகத்திலே நிறைவான மகிழ்ச்சியை கண்டடைந்தார். சோதனை வந்த போதும் அவர் உள்ளத்தில் இருந்த அமைதியை யாரும் மேற்கொள்ள முடியவில்லை. ஈற்றிலே தேவன் எல்லாவற்றிலுமிருந்து அவருக்கு வெற்றியை கொடுத்தார்.


தேவனைத் தொழுதுகொள்வோம்

Posted on April 23, 2016 15:54:01

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: யோவான் 4:24, 1 கொரிந்தியர் 2:9-11

“தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.”

பொல்லாதவர்களாக இருந்த எங்களுக்கு பரமபிதா பரிசுத்த ஆவியானவரைத் தந்திருக்கிறார்.


எங்கள் கடன்களை மன்னியும்

Posted on April 21, 2016 00:48:04

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH - SCARBOROUGH, ONTARIO, CANADA

இன்றைய வாசகம்: மத்தேயு 6:9-15, 18:23-35

ஒரு ஊழியக்காரன் தான் பட்ட கடனை தீர்க்க நிர்வாகம் இல்லாதி ருந்தபோது அந்த பெருங்கடனை அவன் எஜமான் அவனுக்கு மன்னித்துவிட்டான். அப்படியிருக்க அந்த ஊழியக்காரன் தன்னிடத்தின் சிறிய கடன் பட்டவனை பிடித்து, அவன் தொண்டையை நெரித்து, அவனை காவலில் வைத்தான்.


கர்த்தருக்கு செவிகொடுப்போம்

Posted on April 20, 2016 11:34:34

INTO A NEW DAY - DAILY DEVOTION IN TAMIL - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, TORONTO, ONTARIO, CANADA

 வாசகம்: அப்போஸ்தலர் 4:19

“பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவி கொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.”


பெலவீன நேரங்களில்

Posted on April 19, 2016 01:07:42

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CADANA   

வாசகம்: கலாத்தியர் 5:16, மத்தேயு 26:41, ஏசாயா 40:29-31

நான் எவ்வளவு முயற்ச்சி எடுத்தாலும் என் வாழ்விலுள்ள வேண்டாத பெலவீனம் குறித்த சந்தர்ப்பத்தில் தலை தூக்கி விடுகின்றது.

உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் எல்லா பாடங்களிலும் சித்தி யடைய கடுமையாக படிக்கின்றார்கள். அதிலும் தங்களுக்கு கஷ்டமாக தோன்றும் பாடங்களை அதிக நேரமும், உதவியும் பெற்று எப்படியும் சித்தியடையும்படி படிக்கின்றார்கள். அதே போல எங்கள் வாழ்வில் தனித்துவமான தனிப்பட்ட பெலவீனங்களிலிருந்து விடுதலை அடைய நாம் இன்னும் அதிகமாக எங்களை தேவனண்டைக்கு கொண்டுவர வேண்டும்.


அவர் கிருபை என்றுமுள்ளது

Posted on April 18, 2016 00:21:22

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: 2 நாளாகமம் 20:6  2 நாளாகமம் 20:1-30

“எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீரல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக் கூடாது.”


சுகம் தரும் தெய்வம் இயேசு

Posted on April 17, 2016 01:52:08

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA     

வாசகம்: யாக்கோபு 5:14,15, ஏசாயா 53:5, யாத்திராகமம் 15:26

ஒரு சமயம் குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.


View Older →