பெலவீன நேரங்களில்

Posted on April 19, 2016 01:07:42

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CADANA   

வாசகம்: கலாத்தியர் 5:16, மத்தேயு 26:41, ஏசாயா 40:29-31

நான் எவ்வளவு முயற்ச்சி எடுத்தாலும் என் வாழ்விலுள்ள வேண்டாத பெலவீனம் குறித்த சந்தர்ப்பத்தில் தலை தூக்கி விடுகின்றது.

உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் எல்லா பாடங்களிலும் சித்தி யடைய கடுமையாக படிக்கின்றார்கள். அதிலும் தங்களுக்கு கஷ்டமாக தோன்றும் பாடங்களை அதிக நேரமும், உதவியும் பெற்று எப்படியும் சித்தியடையும்படி படிக்கின்றார்கள். அதே போல எங்கள் வாழ்வில் தனித்துவமான தனிப்பட்ட பெலவீனங்களிலிருந்து விடுதலை அடைய நாம் இன்னும் அதிகமாக எங்களை தேவனண்டைக்கு கொண்டுவர வேண்டும்.

எங்கள் மனதை தேவ காரியங்களால் நிரப்ப வேண்டும். சபை செயற் திட்டங்கள் அல்ல, வேத வசனங்களை அதிகமாக வாசித்து தியானியுங்கள், நேரம் எடுத்து தேவனுடைய பாதத்திலிருந்து தனிப்படவும், குழுவாகவும், சபையில் நடைபெறும் ஜெபங்களில் கலந்து கொள்ளுங்கள். அப்போது சோதனை நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்று தேவ ஆவியானவர் எங்களை வழி நடத்துவார். தேவ நியமங்களின் படியாக சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக் கொள்வோம். தேவன் கைவிடமாட்டார் என்னும் விசுவாசத்தை தளரவிட்டுவிடாதிருங்கள்.