Posted on April 21, 2016 00:48:04
INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH - SCARBOROUGH, ONTARIO, CANADA
இன்றைய வாசகம்: மத்தேயு 6:9-15, 18:23-35
ஒரு ஊழியக்காரன் தான் பட்ட கடனை தீர்க்க நிர்வாகம் இல்லாதிருந்தபோது அந்த பெருங்கடனை அவன் எஜமான் அவனுக்கு மன்னித்துவிட்டான். அப்படியிருக்க அந்த ஊழியக்காரன் தன்னிடத்தின் சிறிய கடன் பட்டவனை பிடித்து, அவன் தொண்டையை நெரித்து, அவனை காவலில் வைத்தான். இந்த சம்பவத்தை அறிந்த எஜமான், தன் ஊழியக்காரனை அழைத்து நான் உனக்கு மன்னித்தது போல நீ உன் உடன் வேலையாளுக்கு மன்னிக்காமற் போனதென்ன என்று அவனை உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக் கொடுத்தான்.
நரக ஆக்கினைக்கென்று நியமிக்கப்பட்ட எங்களை, தன்னுடைய குமாரன் என்றும் பாராமல், எங்களை மீட்க இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். ஆகவே நாங்களும் எங்களுக்கு தப்பிதங்கள் செய்பவர்களை மன்னிக்க பழகிக்கொள்ள வேண்டும். மனு~ருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனு~ருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.