நற்கிரியைகளின் பலன்

Posted on April 26, 2016 01:23:16

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: வெளி 22:12, ஏசா 43:2, 1 கொரி 10:13, ரோமர் 2:6-7,

 உபத்திரவத்தின் மேல் உபத்திரவம், எப்பக்கமும் நெருக்கப்பட்டிருக் கின்றேன், நடுக்கடலில் கொந்தளிக்கும் அலைகள் நடுவே விடப்பட்ட கப்பலைப் போல என் வாழ்க்கiயின் சூழ்நிலை இருக்கின்றது என சிலர் சொல்லிக் கொள்ளுவார்கள். இவ்வனுபத்தை யாவரும் சில கட்டங்களில் கடக்க நேரிடுகின்றது.

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது என்று ஜீவனுள்ள தேவன் தம்முடைய ஜனங்க ளுக்கு கூறியிருக்கிறார்.

தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமை யையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார். கர்த்தருக்குள் எங்கள் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது, இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியை களின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என்று கர்த்தர் கூறியிருக்கிறார்.