அவர் கிருபை என்றுமுள்ளது

Posted on April 18, 2016 00:21:22

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: 2 நாளாகமம் 20:6  2 நாளாகமம் 20:1-30

“எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீரல்லவோ தேவன்;, தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக் கூடாது.”

ஆம், எங்கள் தேவனே தேவன்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொண்ட அத்தனை பேரையும் தேவன் தம்முடைய பிள்ளைகளாகும்படி அழைத்திருக்க, அவருடைய பிள்ளைகளை யார் எதிர்த்தாலும், கர்த்தர் அவர்களை எதிர்க்கிறவராய் இருக்கிறார். கர்த்தருக்கு பயந்து அவருடைய வழிகளிலே நடந்து, அவரை உண்மை மனதுடன் சேவிக்கிற தம்முடைய பிள்ளைகளை கர்த்தருடைய கிருபை தாங்குகிறது.

இராஜாவாகிய யோசபாத் தேவனாகிய கர்த்தரை முழு மனதோடு நம்பி, ஆயுதமணிந்தவர்களுக்கு முன்பாக நடந்து போய், கர்த்தரைத் துதிக்கும் பாடகர்களை நிறுத்தினான். துதித்தான், துதித்தார்கள், ஜெயம் பெற்றுக்கொண்டார்கள்.  கர்த்தருக்கு பிரியமான வழிகளிலே நடப்போம். அவர் கிருபை எங்களை தாங்கி நடத்தும்.