தேவனைத் தொழுதுகொள்வோம்

Posted on April 23, 2016 15:54:01

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: யோவான் 4:24, 1 கொரிந்தியர் 2:9-11

“தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் என்றார்.”

பொல்லாதவர்களாக இருந்த எங்களுக்கு பரமபிதா பரிசுத்த ஆவியானவரைத் தந்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவரால் நிரம்பி வழி நடத்தப்படுகின்ற வாழ்க்கையே உன்னதமான வாழ்க்கை. பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களே, தேவனின் அன்பையும், தேவன் எங்களுக்கு வைத்திருக்கும் உன்னத வாழ்க்கையையும், அவர் ஆயத்தம்பண்ணி வைத்திருப்பவைகளையும் அறிந்து அவருடைய வார்த்தையினாலும், வரங்களினாலும், நிரப்பப்பட்டு, வாழ்வை தேவனுக்கு அர்பணித்து வாழ்கிறார்கள்.

கேட்கிற எவனும் பெற்றுக் கொள்கின்றான், சீரான நோக்கத்துடன், ஆர்வமாய் கேட்டு பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வோம். இந்த உலகில் உன்னத வாழ்விற்கு வழி நடத்தலைத் தரும் தேற்றரவாளனான ஆறுதலின் தேவனை பெற்று, கர்த்தராகிய ஒரே தேவனைத் தொழுது கொள்வோம். பரிசுத்த வாழ்க்கை வாழ்வோம்.