Ministries

ஊழியங்கள்

Church

As Apostle Paul writes to Timothy “O Timothy, keep that which is committed to thy trust” (I Timothy 6: 20)”- Our main goal is to be faithful to God in what has been entrusted to us, and to be a part of fulfilling His eternal purpose, by doing His will in our lives.

Jesus Said: “He that gathereth not with me scattereth abroad.” So gather His people with Him and so that they can abide in Him and bear good fruits.

We educate and encourage believers to desire in “Till we all come in the unity of the faith, and of the knowledge of the Son of God, unto a perfect man, unto the measure of the stature of the fullness of Christ:

That we henceforth be children no more, tossed to and fro, and carried about with every wind of doctrine, by the sleight of men, and cunning craftiness, whereby they lie in wait to deceive;

“But speaking the truth in love, may grow up into him in all things, which is the head, even Christ: (Ephesians 4:13-15)

With love, we emphasize and remind all the believers “For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul?” So guard everything that is bestowed to your trust, and explain the importance of good governance of our elect and calling.

Evangelism and Outreach

With love, we emphasize the importance that our personal lives, at home, in the work place, at education centers, anywhere and everywhere we go, and in church should be a living epistle to others.

As said in the scriptures, preach the word; be instant in season, and out of season – We make use of the opportunities that come our way to share the good news with others.

We produce a book called “The Inner Man” on a monthly basis to:

  • Share the good news to everyone
  • Edify and encourage the believers the importance of change within.

We visit houses, hospitals and special care homes to pray, encourage, help, and share the good news. Salvation comes from God.

Deliverance Prayer Group

Smaller groups meet on 2nd, 3rd and 4th Fridays for house prayers.

Women partake in a chain prayer every Thursday to pray for any needs.

Sunday School

In the current world, young children and youth are facing unique challenges than ever before. Since many of their parents were brought up in different atmosphere and in a different time, parents are put in a difficult position as they learn to grasp the fundamental factors that their kids are struggling with. Even though they may try to understand and admonish their children, in many circumstances, children have been pushed into situations where they have to make their own decisions, and at times it has to be spontaneous. Decisions made haphazardly, or life lived in trial and error basis will have ramifications and at its worst, it may cost lives too. So it is inevitable that children need God’s guidance to succeed in their lives.

To know God and to understand His ways, the children need to be coached, mentored, guided, admonished and trained in God’s ways. This journey starts at home and is first and foremost led by an exemplary life style from parents. In addition, children need a structured Christ centered education from their early years, and they need to know and understand the importance of the guidance of the Holy Spirit. To face and succeed the challenges in their respective ages, children need to be educated and equipped to make the right choices at the right time. In every situation, for the children to distinguish the ways of this world from the ways of God, they need to understand the word of God.

Based on these circumstances, we have structured the Sunday school classes starting from the age four (4) to the age eighteen (18). The church invests a significant portion of its resources to obtain necessary Bible related materials, Christian resources, and teachers (volunteers) who can diligently educate and admonish the children.

Train up a child in the way he should go: and when he is old, he will not depart from it. (Proverbs 22:6)

சபை

ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொள் (1 தீமோத்தேயு 6:20) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறியிருக்கிறார். எங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டதில் பிரமாணிக்கமுள்ளவர்களாக இருந்து தேவனுடைய அநாதி நோக்கத்தை நிறைவேற்ற அவருடைய திருச் சித்தத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களின் பிரதானமான ஊழிய நோக்கம்.

இயேசு சொன்னார்: “என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கிறான்”. அவருடைய ஜனங்களை அவருடன் சேர்த்து, அவரில் இசைந்திருந்து கனி கொடுக்க பிரயாசப்படுகின்றோம்

“மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,

நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,

"அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.” (எபேசியர் 4:11, 14 ,15)

ஆகவே ஒவ்வொருவரும் இப்படியான வளர்ச்சியை வாஞ்சித்து பின்தொடர, தேவ வசனத்தினூடாக அறிவூட்டி, ஊக்குவிக்கிறோம்.

ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கி கொண்டு தன் ஆத்துமாவை இழந்து போனால் அதனால் அவனுக்கு பலன் என்ன? என்னும் வசனத்தை அன்புடன் நினைப்பூட்டி, வலியுறுத்தி, ஒவ்வொருவரிடமும் அர்ப்பணிக்கப்பட்டதை கருத்துடன் காத்து, எங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் நல்ல ஆளுகையுடன் நிறைவேற்றவும், புத்திசொல்கிறோம்.

சுவிஷேச ஊழியம்

தனிப்பட்ட வாழ்க்கையிலும், வீட்டிலும், வேலையிலும், கல்வி கற்கும் இடங்களிலும், செல்லும் இடமெங்கும் தேவனுடைய சாட்சிகளாகவும், நடமாடும் நிரூபங்களாகவும் இருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை அன்புடன் வலியுறுத்துகின்றோம்.

நேரம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் சுவிஷேசத்தை பிரசங்கி என்று வேத வசனம் கூறுவதுபோல, எங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நற்செய்தியை அறிவிக்கிறோம்.

நற்செய்தி அறிவிக்கும் நோக்குடனும், விசுவாசிகள் பக்திவிருத்தியடைந்து தேவ சாயல் அடையும் படியாகவும், “உள்ளாந்த மனிதன்” என்னும் மாதாந்த சஞ்சிகையை பிரசுரிக்கப் படுகின்றது.

ஜெபம் செய்வதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும், தேவையுள்ள இடங்களில் உதவி செய்வதற்காகவும், தேவனுடைய நற்செய்தியை கூறுவதற்காகவும் நாங்கள், இல்லங்கள், மருத்துவமனைகள், விசேட பராமரிப்பு விடுதிகளுக்கு சென்று வருக்கின்றோம். இரட்சிப்பு கர்த்தரிடத்தில் இருந்து வரும்.

விடுதலையின் ஜெபம்

ஒவ்வொரு மாதமும், 2ம், 3ம், 4ம் வெள்ளிக் கிழமைகளில் வீட்டு ஜெப கூட்டம் நடை பெறுகின்றது.

ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் பெண்கள் சங்கிலி ஜெபம் ஏறெடுக்கின்றார்கள்.

ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை

இன்றைய உலகில் பிள்ளைகள், வாலிபர்கள் பலதரப்பட்ட சவால்களை எதிர்நோக்குகிறார்கள். பெற்றோர் வேறு தேசத்திலே கல்வி கற்றதால், இங்கு பாடசாலையில் தங்கள் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவைகளை உண்டு பண்ணும் அடிப்படைக் காரணிகளையும் அறிய சிரமமாயிருக்கின்றது. அவற்றை அறிந்து கொண்டாலும், பல சமயங்களிலே, பிள்ளைகள் தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுகின்றார்கள். ஆகவே பிள்ளைகள் தங்கள் சூழ்நிலைகளை வெற்றிகொள்ள தேவ வழிநடத்துதல் இன்றியமையாதது.

தேவ வழிநடத்தலை பெற்றுக்கொள்ள, பிள்ளைகள், சிறிய வயதிலிருந்தே முறையான கிறிஸ்தவ பாடத்திட்டத்தின் படி பயிற்றப்பட வேண்டும். அந்தந்த வயதிற்குரிய சவால்களை எதிர் நோக்கி வெற்றி பெற, சரியான காலத்தில், தேவ காரியங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். எப்படி தேவ வழி நடத்தலை பெற்றுக் கொள்வது, எவை தேவனிடமிருந்து வருகின்றது, எவை இந்த உலகத்தினால் திணிக்கப்படுகின்றன என்பதை அறிய, முறையான பாடத்திட்டம் அடங்கிய வேதாகம பாடங்களை ஒழுங்காக கற்றுக் கொள்ள வேண்டும்.

இவற்றை மையமாக கொண்டு, ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை (Sunday School) வகுப்புகளை அமைத்துள்ளோம். நாலு (4) வயதிலிருந்து பதினெட்டு (18) வயதுவரை, முறையான வேதபாடங்களை கற்றுக்கொள்ள தேவையான புத்தகங்களை பெற்றுக்கொள்வதில் நாங்கள் முதலீடு செய்கின்றோம். கரிசனையோடு கற்றுக்கொடுக்கும் தகுந்த ஆசிரியர்களை ஒழுங்கு படுத்தியுள்ளோம்.

உங்கள் பிள்ளைகளுக்கு தேவ காரியங்களை, அவர்களின் சிறிய வயதிலிருந்தே கற்றுங் கொடுங்கள்.