மனப்பாரங்களிலிருந்து விடுதலை

Posted on April 26, 2016 01:21:10

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: மத்தேயு 8:25

“அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.”

சிருஷ்டிகரோடு இருந்தவர்களே பயந்து நடுங்கினார்கள். காரணம், அற்பவிசுவாசம். அவர்களிடத்தில் பூரண விசுவாசம் காணப்படவில்லை. அமிழ்ந்து போகிறோம் கர்த்தாவே, எனது வாழ்க்கையில் மட்டுமே புயல், எனக்கு மட்டுமே கடன், நோய், தனிமை, நோவு, வழி தெரியவில்லையே என அங்கலாய்க்கிறோம்.

எனது வாழ்க்கைப் பிரயாணத்தில் அமைதியில்லை, காற்றும் மழையும், கலக்கம் உண்டாக்கும் இடியும் மின்னலும், இப்படியான இன்னல்களால் சோர்ந்து, கலங்கிய நிலையில் இருக்கும் உங்களை அழைக்கும் சத்தம் கேட்கிறதா? இயேசுவோடே தோணியில் ஏறிக்கொள், அவர் உன்னை கரைசேர்ப்பார். அவரே காற்றையும் கடலையும் சிருஷ்;டித்தவர் எனவே அவரின் படகு ஒருநாளும் கவி ழ்ந்து போகாது. ஒரு நாளும் நீ மடிந்து போவதில்லை, அவர் உன்னைக் கரை சேர்ப்பார். உனக்காக யாவற்றையும் செய்து முடிப்பார். நீ விசுவாசித்தால் உன் வாழ்க்கையில் மகிமையைக் காண்பாய்.