என் தேவனே என் பெலன்

Posted on May 01, 2016 01:19:35

 INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

 வாசகம்: மீகா 7:7

“நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.”

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இந்த உலகத்திலே, தம்பியுடை யவன் படைக்கு அஞ்சான் என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள். நகமும் சதையுமான நண்பர்கள், தலைவனுக்கேற்ற தளபதி, குருவு க்கேற்ற சிஷயன், தகுதிக்கேற்ற மனைவி, அழகுக் கேற்ற அறிவு இப்படியாக ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் இவர்கள் ஒருநாள் ஒருவருக்கொருவர் எதிரிடையாவார்கள். என் மடியிலிருந்தே எனக்கு பொல்லாப்பு செய்துவிட்டார்கள் என்று இந்த உலகத்தில் புலம்புகிறவர்களை காண்கிறோம்.

ஆனால் கர்த்தரோடு வாழ்ந்து, கர்த்தருக்காக காத்திருக்கிறவர்கள், விழுந்தாலும் எழுந்திருப்பார்கள். அவர் சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தையும், பெலனில்லாதவனுக்கு பெலனையும் கொடுக்கிறவர். எங்களுக்காக தன்னையே அர்;ப்பணித்த கர்த்தருக்காக காத்திருப்போம். என் இரட்சிப்பின் தேவன், என்னைக் கேட்டருள்வார். துன்பவேளையில் அவரே எனது பெலன். ஆமேன்!