பொறுமையோடு ஓடக்கடவோம்

Posted on May 01, 2016 01:17:50

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: 2 பேதுரு 3:3-14  2 தீமோத் 4:7-8

கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைக ளின்படியே நடந்து, இயேசு வருவார் என்று சொல்லுகிற வாக் குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். இந்தப் பரிகாசக்காரரை கண்டு எவ்வளவேனும் மனம் தளர்ந்து போகாதிருங்கள்.

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத் தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

எனவே எங்களிடம் ஒப்புவித்ததை நிறைவேற்றுகிறவர்களாய், எங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்திக் கொண்டு, பொறுமையோடு ஓடக்கடவோம். கர்த்தராகிய இயேசு வெளிப்படும் நாளிலே பெரு மகிழ்ச்சி காத்திருக்கின்றது. அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் ஜீவகீரிடத்தை தருவார்.