ஒரு நன்மையும் குறைவுபடாது

Posted on April 23, 2016 15:56:33

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: சங்கீதம் 37: 7-11 பிலிப்பியர் 4:19

தாவீது என்னும் ராஜா பல இக்கட்டிற்கூடாக கடந்து சென்ற போதிலும், தேவனுடைய சமூகத்திலே நிறைவான மகிழ்ச்சியை கண்டடைந்தார். சோதனை வந்த போதும் அவர் உள்ளத்தில் இருந்த அமைதியை யாரும் மேற்கொள்ள முடியவில்லை. ஈற்றிலே தேவன் எல்லாவற்றிலுமிருந்து அவருக்கு வெற்றியை கொடுத்தார்.

கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவரைத் தேடுகிறவர்களுக்கு குறைவில்லை.

சூழ்நிலைகளை கண்டு மருளாதிருங்கள், கெர்ச்சிக்கிற சிங்கம் போல சாத்தான் வந்தாலும் தேவ ஆவியாவர் எங்களை விடுவிப்பார்.

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. அவரை உண்மையாய் தேடுகிற யாவருக்கும் அருகில் உள்ள தேவன் அவர்.