சுகம் தரும் தெய்வம் இயேசு

Posted on April 17, 2016 01:52:08

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA     

வாசகம்: யாக்கோபு 5:14,15, ஏசாயா 53:5, யாத்திராகமம் 15:26

ஒரு சமயம் குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசத்துடன் நாடித் தேடிய மனிதர்கள் அன்றும் இன்றும் தெய்வீக சுகத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று உங்கள் நோய்களை தேவனுடைய சமூகத்தில் தெரியப்படுத்தி, விசுவாசத்துடன் உங்களை அவரிடம் ஒப்புக் கொடுங்கள், தேவன் உங்களுக்கு சுகம்தருவார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். சுகம் தரும் தெய்வமாகிய இயேசுவை கிட்டிச்சேருவோம்!