கர்த்தருக்கு செவிகொடுப்போம்

Posted on April 20, 2016 11:34:34

INTO A NEW DAY - DAILY DEVOTION IN TAMIL - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, TORONTO, ONTARIO, CANADA

 வாசகம்: அப்போஸ்தலர் 4:19

“பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவி கொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.”

நாங்கள் அவரைக் கண்டோம், அவரிடத்தில் கேட்டோம், அவைகளை பேசினோம். இயேசுவே எங்கள் பிதாக்களின் தேவனாகிய தேவனின் பரிசுத்த பிள்ளை, பரிசுத்தமும் நீதியும் நிறைந்தவர். அவரே அன்றி மனிதர்கள் இரட்சிப்படையும்படி வேறே நாமம் இல்லை என்றார்கள்.

உலகம் தரக்கூடிய எல்லா ஐசுவரியங்களைப்பார்க்கிலும் மிக மேன் மையான தேவனுடைய பரிசுத்த ஆவியானவரை பெற்றிருக்கிறோம்.

எங்கள் வாழ்க்கை எந்த நிலையில் இருந்தாலும் நாங்கள் எழுந்து நடக்கத்தக்கதாகவும், மற்றவர்களை ஊக்குவிக்கும்படியாக அதிகாரமு ள்ளவர்களாக இருக்கிறோம், அப்படியானால் நாங்கள் சோர்வடை யலாமா? சூழ்நிலைகளை கண்டு பயப்படாமல், உலகத்திற்கு செவி கொடாமல், தேவனுக்கே செவி கொடுப்போம்! இயேசுவே கர்த்தர் என்பதை அறிவிப்போம்.