இணைந்து கொள்ளுங்கள்

எல்லா ஆசீர்வாததின் ஊற்றாகிய தேவனாகிய கர்த்தரிடத்திற்கு நாங்கள் உங்களை வழிநடத்துகின்றோம். வாழ்வின் நோக்கத்தை அறிந்தவர்களாய், முடிவில்லாத சமாதானத்தைத் தருபவராகிய இயேசு கிறிஸ்துவுவை சேரும்படியாய் வழிநடத்துகின்றோம்.


ஞாயிறு ஆராதனை

பிரதி ஞாயிறு தோறும் காலை 10 மணி முதல் நண்பகல் 12 வரை துதி ஆராதனை நடைபெறுகின்றது. பெற்றோர் பிள்ளைகளுடன் இணைந்து குடும்பமாக தேவனைத் துதிக்கும்படிக்கு, துதி ஆராதனையானது, தமிழ் ஆங்கில மொழிகளில் நடைபெறுகின்றது.


தேவைகளுக்கான ஜெபம்

ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், மாலை 7:30 மணிக்கு, துதியும் ஜெபமும் நடைபெறுகின்றது. தேவனாகிய கர்த்தரின் பிரசன்னத்தை நாடி வாருங்கள்.


பிள்ளைகளும் வாலிபரும்

பிள்ளைகள் வாலிபருக்கான பல செயற்பாடுகள், வருடம் பூராகவும் நடைபெற்று வருகின்றது. திட்டமிடப்பட்ட, பாடத்திட்டத்திற்கமைய, 4 வயதிலிருந்து 18 வயது வரைக்கும், பிள்ளைகளுக்கான ஞாயிறு ஓய்வு நாள் பாடசாலை நடைபெறுகின்றது.


ஜெபமும் வேதபாடமும்

மாதந்தோறும், 2ம் சனிக் கிழமை காலை 10:00 மணியிலிருந்து மதியம் 2:30 மணிவரை, ஜெபமும், வேதபாடமும் நடைபெற்று வருகின்றது. கர்த்தருடைய பிரசன்னத்தில் நீண்ட நேரம் ஜெபத்திலும் தியானத்திலும் தரித்திருக்க விரும்புவோர்க்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.