Our Blog

எங்கள் வலைப்பதிவில்

ஊக்கமாக ஜெபம் செய்வோம்

Posted on April 12, 2016 18:17:04

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: 1 தெசலோ 5:17-18, யாக்கோபு 5:15 ரோமர் 8:34

தேவைகள், நெருக்கங்கள், மனச் சோர்வுகள் மனிதர்களின் வாழ்வில் சகஜமாக வருகின்ற காரியங்கள். வாழ்க்கையை ஜெயம் கொண்ட பரிசுத்தவான்கள் என்று கூறும் போது, அவர்கள் இந்த உலகத்தில் இருந்த போது அவர்கள் வாழ்க்கையிலே ஒரு கட்டத்திலே எவ்வித துன்பங்களும் வந்ததில்லை என்று பொருள் அல்ல.


நான் உன்னைக் குணமாக்குவேன்

Posted on April 12, 2016 13:50:59

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: 2 இராஜாக்கள் 20:5

உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். என்று எசேக்கியா ராஜாவிற்கு தேவனாகிய கர்த்தர் செய்தி அனுப்பினார்.


கன்மலையில் மேல் அஸ்திபாரம்

Posted on April 12, 2016 13:47:12

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: மத்தேயு 7:24-27

இடாம்பீகமாக இருந்த ஒரு மாடிக் கட்டிடம் ஒன்றின் சுவரிலும், நிலத்திலும் சிறிய வெடிப்புக்கள் ஏற்பட்டன, உள்நாட்டு அரசாங்க விதிமுறைகளை திருப்திப்படுத்துமுகமாக அந்த வெடிப்புக்களுக்கு வெறும் பூச்சுக்கள் பூசப்பட்டனவே அன்றி, அந்த வெடிப்பின் காரணத்தை திருத்தவில்லை. காலப்போக்கில் அந்த பல மாடிக்கட்டிடம் உடைந்து அதில் வேலை  செய்த பலர் மாண்டு போனார்கள்.


தேவ ஒளி வந்தது!

Posted on April 12, 2016 13:42:44

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

இன்றைய வாசகம்: யோவான் 3:21, யோவான் 1:9

சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்று இயேசு கூறினார். உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்து ஒரு மனிதனின் வாழ்க்கையில் வரும் போது உடைந்துபோன பாத்திரமாக இருந்த மனிதனில் வெளிச்சம் உண்டாகின்றது. பிதாவாகிய தேவன் பரத்திலிருந்து தன்னை வெளிப்படுத்த சித்தமாயிருக்கிற எந்த பாத்திரமோ, அந்த பாத்திரமே இயேசு கிறிஸ்து என்னும் நித்திய ஒளியைப் பெற்று, உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறது. 

 


முதல்ப்படியில் காலை வைப்போம்!

Posted on April 12, 2016 13:34:40

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

இன்றைய வாசகம்: மத்தேயு 6:27,33,34, பிலிப்பியர் 4:6, 13

முதல்த்தடவையாக பாடசாலைக்கு செல்லும் மாணவன், தான் இத்தனை வகுப்புகளை கடந்து, இத்தனை பாடங்களில் சித்தியடைந்து அதன் பின் பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் என்று ஏங்கி நின்றால் அவன் இன்று படிக்க வேண்டியதை கற்க முடியாமல் மனஉழைச்சலடைவான். பத்துப் படிகள் இருக்கும் ஒரு மாடியில் ஏறுவதற்கு முதல் படியில் கால்களை எடுத்து வைப்போம். நாளையைக் குறித்தும் எதிர் காலத்தைக் குறித்தும் கவலையடைந்தால், இன்று என் வாழ்க்கையில் செய்ய வேண்டியவைகளை சிறப்பாக செய்ய முடியாது.


ஜீவனின் அதிபதி

Posted on April 12, 2016 13:21:48

INTO A NEW DAY... - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

இன்றைய வாசகம்: யோவான் 10:10, 10:26-29, கொலோ 1:27

“திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.”


சமாதான நதி

Posted on April 12, 2016 13:16:47

ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனின் வாழ்க்கையில் திடிரென்று ஒரு வியாதி ஏற்பட்டு விட்டது. ஊர் மருத்துவரிடம் அந்த வியாதியை மாற்றும் மருந்து இருந்தது, மருத்துவர் இருக்கும் இடத்தையும் அவர் நன்கு அறிந்தவராக இருந்தும், அங்கு செல்ல அந்த மனிதனுக்கு மனதில்லை, அதனால் தன் வியாதியினால் வருந்திக் கொண்டே இருந்தார்.


பழுவும் விடுதலையும்

Posted on April 08, 2016 01:04:53

BURDEN AND DELIVERANCE - A TAMIL CHURCH IN TORONTO, ONTARIO, CANADA

எந்தக் காரியமானாலும் அது ஓருவரின் பெலத்திலும் அதிகமாகும் போது அது அவருக்கு பழுவாகி விடுகின்றது. வேலை செய்ய வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற விருப்பம் எல்லோரிட த்திலும் உண்டு. அவ்விருப்பம் உள்ளவர்களும் விடுமுறையை விரும்புகி;றார்கள். காரணம் ஓய்வு தேவை.


கண்கள் இருந்தும் காதுகள் இருந்தும்

Posted on March 31, 2016 02:20:45

A SCARBOROUGH TAMIL CHRISTIAN CHURCH, TORONTO, ONTARIO - TAMIL CHIRSTIAN ARTICLE

ஓரு சிறு பையன் தனது வீட்டிலே விளையாடிக் கொண்டிருந்தான். அவனுடைய தாயார் அவனிடத்தில் அவனது அப்பா வந்திருப்பதாய் கூறினாள், ஆனால் அவனோ அப்பா வரவில்லை என்று மறுத்தான். அவன் தாயோ இங்கே வந்து பார், இதோ அப்பா வந்திருக்கிறார் என்றாள். அவனோ மீண்டும் மறுத்தான். அதைக் கேட்ட தகப்பனார் அவனைப் பெயர் சொல்லி அழைத்தார். அவனோ தான் மறுத்ததை சாதிக்க தன் காதுகளை தன் கையினால் அடைத்துக் கொண்டு தன் வாயினாலே தொடர்ச்சியாக சத்தம் போட்டான்.


காற்றுள்ள போதே..

Posted on March 31, 2016 02:15:23

TAMIL CHRISTIAN ARTICLE, GRACE TABERNACLE CHURCH, TORONTO ONTARIO 

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி. இதற்கொத்த பழமொழிகள் வேறு பாஷைகளிலும் உள்ளன. நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிடாது பயன்படுத்துவதின் அவசியத்தை மனிதர்கள் அறிந்துள்ளமையால் இத்தகைய பழமொழிகளை உண்டுபண்ணியுள்ளனர். ஓருவர் கூறிய ஒரு உண்மை சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது ஏற்றதாயிருக்கும்.


Harvest!

Posted on March 28, 2016 19:38:32

Harvest! -  A Tamil Christian Church in Toronto, Ontario, Canada.

When Jesus sent out 70  disciples for missionary Work, He Said: The harvest truly is great, but the labourers are few: pray ye therefore the Lord of the harvest, that he would send forth labourers into his harvest.

இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.


எனது அடையாளம்

Posted on March 28, 2016 02:50:38

MY IDENTITY - TAMIL ARTICLE  - BY A TAMIL CHURCH BLOG, TORONTO, ONTARIO, CANADA

யாரப்பா நீ? என்ற கேள்வியுடன் முதியவர் ஓருவர் மனிதர்களை சந்தித்தார். அவரிடத்தில் அமைதியும் பேச்சில் கெம்பீரமும் இருந்தது. அவர் ஒருவரைப் பார்த்து யாரப்பா நீ என்று கேட்டார். அதற்கு அவர் தான் ஒரு வைத்தியர் என்று சொன்னார். முதியவர் அவரை உற்றுப்பார்த்து, வைத்தியர்கள் அநேகர் இருக்கின்றார்கள், யாரப்பா நீ என்று கேட்டார். அதற்கு அந்த வைத்தியர் தனது பெயரை சொன்னார். அந்த முதியவர் அவரை நோக்கி இந்த பெயரிலும் அநேகர் இருக்கிறார்களே, நீ யாரென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா என்று கேட்டார். அப்போது அந்த வைத்தியர் தான் இன்னாருடைய மகனென்றும், திருமணமாகி தனக்கு மனைவி பிள்ளைகள் உண்டு என்று விபரங்களைச் சொன்னார்.


View Older →