Posted on April 12, 2016 13:21:48
INTO A NEW DAY... - INNER MAN TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA
இன்றைய வாசகம்: யோவான் 10:10, 10:26-29, கொலோ 1:27
“திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.”
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறவர்களின் இதயத்தில் மகிமையின் நம்பிக்கையாக அவர் வாசம் பண்ணுவார். அவரே உன் ஜீவனின் அதிபதி! உன் கோட்டையும், தஞ்சமும், அரணுமான அவரை நீ அறிந்திருப்பதனால்; உனக்கு முன்பாக வைக் கப்படுகிற தடையான கற்களை அவர் புரட்டும்படி செய்கிறார். இயேசு சொன்னார் என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித் துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
பிரியமானவர்களே, உலக ஆசைகள், இச்சைகள், பாவங்களை, மாய்மாலங்களை தடைக்கல்லாக சத்துருவானவன் உங்களுக்கு முன்பாக வைக்கிறான். ஆதிமுதற் கொண்டு அவன்; பொய்யனாக இருக்கின்றான். எனவே எங்களுக்கு ஜீவனை தந்து நாம் பரிபூரணமடையும்படி தன்னையே பலியாக கொடுத்த இயேசுவை நோக்கிப் பார்ப்போம்.