தேவ ஒளி வந்தது!

Posted on April 12, 2016 13:42:44

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

இன்றைய வாசகம்: யோவான் 3:21, யோவான் 1:9

சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்று இயேசு கூறினார். உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்து ஒரு மனிதனின் வாழ்க்கையில் வரும் போது உடைந்துபோன பாத்திரமாக இருந்த மனிதனில் வெளிச்சம் உண்டாகின்றது. பிதாவாகிய தேவன் பரத்திலிருந்து தன்னை வெளிப்படுத்த சித்தமாயிருக்கிற எந்த பாத்திரமோ, அந்த பாத்திரமே இயேசு கிறிஸ்து என்னும் நித்திய ஒளியைப் பெற்று, உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறது. 


ஆம் சகோதரரே, கர்த்தராகிய ஆண்டவரிடத்தில் தன்னை ஒப்புக் கொடுத்து, அவர் சித்தம் செய்து, அவரிடத்தில் ஊழியம் செய்ய வாஞ்சையாயிருக்கிற ஒவ்வொரு பிள்ளையையும் ஆசீர்வதிக்கிற தேவாதி தேவன், நீ சத்தியத்தின்படி நடப்பதற்கும், அவருடைய கட்டளைகளையும் நியமங்களையும் கைக்கொண்டு நடக்கும்படியாக அழைத்திருக்கிறார். நீயே பாக்கியவான்! கர்த்தரே உன் வாழ்வின் ஒளி.