Posted on February 20, 2023 01:49:58
ஏதாகிலும் கிடைக்குமா? எனக்கு என்ன கிடைக்கும் என்பது மனிதர்களின் மனதில் அவ்வப்போது எழும் கேள்வியாயுள்ளது. இந்த உலகிலே நாம் வாழும் நாட்களெல்லாம் எமக்குத் தேவைகளுண்டு. அதை யாரும் மறுக்க முடியாது. ஓவ்வொரு நாளுக்கும் அதற்குரிய தேவைகளுண்டு. மனித சுபாவமானது தரிசித்து நடப்பதாயுள்ளது. மனிதர்கள் தாம் காண்கிறவற்றின் அடிப்படையிலே வாழ்க்கையை நடத்துகின்றார்கள். இதனால் அநேகர் தாம் காண்கின்றவற்றிற்காகவே வாழ்ந்து தம் வாழ்க்கையை முடித்துக்கொள்கி ன்றார்கள். இன்னும் பலர் அவற்றை அடைந்து கொள்ளும்படி தவறான வழிகளை பின்பற்றுகின்றார்கள். இவ்வுலகிலே அன்றாடம் இவைகள் நடப்பதைக் காண்கின்றோம், கேள்விப்படுகின்றோம்.
ஆபிரகாமோடு தேவன் பேசினார். ஆபிரகாம் தேவனிடத்தில், கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே என்று கேட்டார். ஆபிரகாமும் அவரது மனைவி சாராளும் வயது சென்றவர்களாய் இருந்தார்கள். காணப்படுபவைகளால் பதில் கிடைப்பதற்கு ஏதுவில்லை. இந்தவேளையில் தன்னை சிருஷ்டித்த தேவனிடத்தில் கேட்டார் அடியேனுக்கு என்ன தருவீர்? தேவனிடத்தில் அவருக்கான பதிலுண்டு என்பதை அவர் அறிந்து விசுவாசித்தார்.
தேவன் அவரை வெளியே அழைத்து: “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால்> அவைகளை எண்ணு என்று சொல்லி. பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.”
அதற்கு இயேசு:
மறுஜென்ம காலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று வாக்களித்தார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரில் முதன்மையாவரான பரிசுத்த பேதுரு கர்த்தரைப் பின்பற்றி வாழ்ந்தார். அவர் ஒருமுறை கர்த்தரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றார்.
தேவன் தம்மைக் கடன்காரராகவொட்டார்.
பேதுரு விசுவாசித்து நடந்தார். பின்பு அவரது வாழ்க்கையில் ஜெபவே ளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே அவரும் யோவானும் தேவால யத்துக்குப் போனார்கள். அவ்வேளையிலே தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்து தேவால யத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி> அவனை அலங் கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைத்தார்கள். தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். பேதுருவும் யோவானும் அவனை உற்று ப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி அவர்களை நோக்கிப்பார்த்தான்.
ஆம், ஏதாகிலும் கிடைக்குமா?
அவன் நினைத்துப் பார்க்காத பெரிதான நன்மையைப் பெற்றுக்கொண்டான். அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை. என்னிட த்திலுள்ளதை உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி> வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்> நடந்து> குதித்து> தேவனைத் துதித்துக்கொண்டு> அவர்களோடு கூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உபதேசிக்கும் போது> சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மா த்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போவதி ல்லை என்று> மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கூறினார்.
பிரியமான சகோதரனே சகோதரியே,
அந்த மனிதன் யார்? என்பதல்ல. மாறாக ஓருவன் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கிரியையை நடப்பிக்கும் போது அவன் ஆசீர்வதிக்கப்படுகி ன்றான். ஆகவே திடன் கொள்ளுங்கள். கர்த்தரை நோக்கிப்பாருங்கள்.