Posted on September 07, 2021 01:11:22
இந்த உலகிலே நடைபெறுகின்ற அநியாயங்களையும் அக்கிரமங்களை யும் பார்க்கும் போது, தேவன் இருக்கின்றார் என்ற நம்பிக்கை எனக்கி ல்லை. நாள்தோறும் எத்தனையோ ஏழைகள் எளியவர்கள் ஒடுக்கப்படு கின்றார்கள், நியாயம் நீதிக்கு இடமில்லை என்று ஒரு ஊரில் வாழ்ந்து வந்த மனிதன் அவ்வப்போது கூறிக்கொள்வான். அந்த மனிதன், இந்த உலக முறைமையின்படி கல்வி கற்றவனும், செல்வமுடையவனுமாக வாழ் ந்து வந்ததால், அவனுடைய தத்துவப் பேச்சுக்களானது அவ்வப்போது அவ் வூரில் வாழ்ந்து வந்த சிலரை கவர்ந்து கொண்டது. அவனுடைய தத் துவப் பேச்சினால் சிலர் இழுப்புண்டு போனார்கள். தேவ நம்பிக்கை யானது தன் வாழ்வில் தனது சுயநீதியை நிறைவேற்ற இடையூறுள்ளதாக இருந்ததால், தேவனில்லை என்று கூறிவிடுவது அவன் கொள்கைகளு க்கும் அவனது வாழ்க்கை முறைமைக்கும் மிகவும் ஏற்புடையதாக இருந் தது.
ஒரு நாள் அவ்வூரிலுள்ள பலர், தம் ஊரில் ஒரு நூலகத்தை அமைப்ப தைப் பற்றி கலந்தாலோசிப்பதற்காக அவ்வூரிலிருந்த சனசமூக நிலையத் தில் ஒன்றுகூடினார்கள். நூலகத்தை குறித்த தங்கள் அபிப்பிராயங்களை சிலர் தெரிவித்தார்கள். அவ்வேளையிலே, தேவ நம்பிக்கையற்ற அந்த மனிதன், தேவ நம்பிக்கை பிரயோஜனமற்றது. ஊரில் எத்தனை ஏழை எளியவர்கள் துன்பப்படுகின்றார்கள் வந்து பாருங்கள் என்று தன்னுடைய சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் பற்றி மறுபடியும் பேச ஆரம்பி த்துவிட்டான். அவன் அந்த ஊரில் கனம் பெற்றவனும், ஊரின் செயற்தி ட்டங்களுக்கு கணிசமான அன்பளிப்பு செய்கின்றவனுமாக இருந்ததால், அவனை எதிர்த்து பேசுவதற்கு எவரும் துணியவில்லை.
அந்த இடத்திலே வந்ததிருந்த ஒரு வயதான போதகர்;, அந்த மனிதனை நோக்கி: பெரியவரே, நீங்கள் இப்படியாக ஏழைகள் கஷ்டப்படுவதையும், எளியவர்கள் ஒடுக்கப்படுவதiயும், பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருக் கின்றீர்கள். கடந்த வருடத்திலே, உங்களுடைய இரண்டாவது மகனான வன், மதுபானம் அருந்திய பின்பு, நாட்டின் நெடுஞ்சாலை விதிகளை மீறி, தன்னுடைய மோட்டார் வண்டியை அதி வேகமாக ஓட்டிச் சென்ற தால், அடுத்த வீதியிலே, வழியோரமாக சென்று கொண்டிருந்த ஏழ்மை யான குடிமக்களை மோதினான். அவர்களில் ஒருவன் இன்னும் படுக்கை யிலே கிடக்கின்றான். இன்னுமொருவன் தன் கால் ஒன்றை இழந்து போ னான். மற்றவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்கள். அந்த விபரீத த்திற்கு யார் காரணம்? பரலோகத்திலிருக்கும் தேவனா? நாட்டின் சட் டமா? அல்லது அதை மீறிய உங்கள் மகனா? என்று கேட்டார். பலர் முன் னிலையில் போதகர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனித னுக்கு மறுமொழி சொல்லிக் கொள்ள முடியவில்லை.
வயதான போதகர் மேலும் கூறுகையில்: பெரியவரே பலர் முன்னிலை யிலே நான் உங்களை அவமதிக்கும்படியாக இவற்றை கூறவில்லை ஆனால் மனித குலத்தின் அவல நிலைக்கு யார் காரணம் என்பதை நீங் களும் இவ்வூராரும் திட்டமாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் இதைக் கூறுகின்றேன். இப்படிப்பட்ட பெரிதான விபத்திற்கு பின்னரும், உங்கள் மகனுடைய சாரதி அனுமதிப்பத்திரம் (வண்டியை ஓட் டுவதற்கான லைசன்ஸ்) இரத்துச் செய்யப்படவில்லை. சிலவேளைக ளிலே, இப்போதும்கூட உங்கள் மகனானவன் அதிவேகமாக வாகன த்தை ஓட்டிச் செல்வதை நாங்கள் காண்கின்றோம். நீங்கள் ஏன் அவனை தடுத்து நிறுத்துவதில்லை? ஏன் தண்டிப்ப தில்லை? என்று கேட்டார்.
தேவ நம்பிக்கையற்ற மனிதன்: அவன் இன்னும் விபரமறியாத இளைஞன். வாழ்க்கையில் நடந்த ஒரு குற்றத்திற்காக அவனை சிறையிலிடுவதும், கடுமையான தண்டனையைக் கொடுப்பதும் நல்லதல்ல. அவனுக்கு இன் னுமொரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும். அவன் உணர்வடையும் காலம் உண்டு. அதுவரை அவன் வருத்தப்படுவதையோ சஞ்சலப்படு வதையோ நான் விரும்பவில்லை என்று கூறினார்.
வயதான போதர்: பெரியவரே, நன்றாக மறுமொழி கூறினீர்கள். அந்த இளைஞனைப் போல உலகிலேயுள்ள சிறியவர்கள், பெரியவர்கள், வய தானவர்கள் பலவிதமான அநியாயங்களையும் அநீதியான காரியங்க ளையும் நடப்பித்து வருகின்றார்கள். ஒரு சொல்லாலே, அநியாயம் செய் கின்றவர்களை அழித்துப் போடுவது, பரலோகத்திலிருக்கின்ற தேவனுக்கு இலேசான காரியம். அப்படியாக, ஒவ்வொரு மனிதன் செய்யும் குற்றத் திற்குத் தக்கதாக, தேவனாகிய கர்த்தர் உடனடியாக சரிக்கட்டுவாராக இரு ந்தால் இந்த பூமியிலே ஒரு மனிதனும் அவருடைய நீதிக்கும் பரிசுத்தத்தி ற்கும் முன் நிற்க முடியாது. யாவரும் நிர்மூலமாகியிருப்பார்கள். (புல ம்பல் 3:22, சங்கீதம் 103:10). தம்முடைய சர்வவல்லமையை மனித குலத்தின் மேல் காட்டாமல், ஒருவரும் தங்கள் அநியாயத்திலே அழிந்து போகா தபடிக்கு யாவரும் மனந்திரும்பி நீதிமான்களாக மாற வேண்டும் என்று தம்முடைய உன்னத அன்பைப் பொழிகின்றார். அது மட்டுமல்ல, தங்கள் அறியாமையிலே 'தேவன் இல்லை' என்று கூறிக் கொள்கின்றவர்களும் மனந்திரும்;பி, நித்திய வாழ்வை பரலோகிலே பெற்றுக் கொள்ள வேண் டும் என அவர்கள்மேல் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து, கிருபை யின் நாட்களை கூட்டிக் கொடுக்கின்றார் என்றார்.
அதுமட்டுமல்லாமல், விபத்திலே மாட்டிக் கொண்ட அந்த ஏழை எளியவர் கள் வாழ்வாதாரம் அற்றவர்களாய் தங்கள் அன்றாட பிழைப்பிற்காக அதி கமாக வருத்தப்படுகின்றார்கள். அவர்களில் சிலரோ வேலை செய்ய முடி யாதபடிக்கு அங்கவீனமுற்றிருக்கின்றார்கள். அவர்களுக்குரிய நஷ்ட ஈடு கள் எதுவும் நீதியாக செலுத்தப்படவில்லை. அவர்களுக்காக பேசுவதற்கு இந்த ஊரிலே யாரும் துணிவதில்லை. ஆனால் இவ்வுலகிலே துயரப்படுப வர்கள் எல்லோருமே தேற்றப்படும் ஒரு நாள் உண்டு. அந்நாளிலே அவ ர்கள் மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என்று பதில் கூறினார்.
தேவனை அறியாத அந்த மனிதன், சுயநீதியுள்ளவனாக இருந்தும், தன் பிள்ளையின் எதிர்காலத்தைக் குறித்து அவன் கொண்டிருக்கும் கரிச ணையைப் பாருங்கள். இந்தப் பூவுலகிலே, மனிதர்கள் செல்வந்தர்களா கவோ அல்லது தங்கள் மாதாந்திர ஊதியத்தின் அடிப்படையில் வாழ்கி ன்றவர்களாகவோ அல்லது நாளாந்த கூலிகளாகவோ இருகின்றார்கள். இன்னும் சிலர் வறுமைக் கோட்டின் கீழ் தங்கள் நாளாந்த அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்கு மிகவும் கஷ்ப்பட்டுவருகின்றார்கள். பொருளா
தார நிலைமை எப்படியாக இருந்தாலும், அவர்கள் சன்மார்க்கமான வாழ்க்கை வாழ்ந்தாலும், துன்மார்க்கமான வாழ்க்கை வாழ்ந்தாலும், தங்களிடமிருக்கும் நிர்வாகத்தின் அளவின்படி, பெற்றோர் தங்கள் பிள்ளை களுக்கு எப்போதும் சிறந்ததை கொடுக்க வேண்டும் என்று உழைக்கி ன்றார்கள்.
'உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங் கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள் ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?' என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார்.
இந்த உலகிலே ஒரு சாரார் தேவன் இல்லை என்று கூறிக் கொள்கி ன்றார்கள். 'தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல் லிக்கொள்ளுகிறான்' என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. (சங்கீதம் 14:1, 53:1). மதிகேடன் என்று கூறும் போது, இந்த உலக முறைமை யின்படி கல்லாதவர்கள் என்பது பொருள் அல்ல. ஒரு வேளை அவர்கள் இந்த உலக முறைமையின்படி கற்றுத் தேறியவர்களாக இருக்கலாம் அல் லது ஒருவேளை இந்த உலக முறைமையின்படி கல்லாதவர்களாக்கூட இருக்கலாம். எப்படியிருப்பினும், அவர்களுடைய மனக்கண்கள் குருடுபட்டி ருப்பதால், இவர்கள் இருளிலே தடுமாறுகின்றார்கள். இவர்கள் உலகத் திலே பெரிய ஞானிகளாக இருந்தாலும், மனதிலே தேவ பயம் இல்லாத தால், தேவ ஞானம் (மெய்ஞானம்) இவர்களுக்கு வெகுதூரமாக இருக்கி ன்றது. தமக்குப் பயந்து அவருடைய வழியிலே நடக்கின்றவர்களுக்கு தேவனாகிய கர்த்தர்தாமே தமது மெய்ஞானத்தை கொடுக்கின்றார். தேவ ஞானத்தைப் பெற்றவர்கள், ஒருவேளை, இந்த உலக முறைமையின்படி ஏழைகளாக இருந்தாலும் கூட, அவர்கள் தேவனைக் குறித்த விசுவாசத் திலே ஐசுவரியவான்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மனக் கண்கள் வெளிச்சமாக இருப்பதால் நித்தியமானவைகளை நாடித் தேடுகின்றார்கள். (யோவான் 3:17-21, மத்தேயு 11:24-25)
மீட்பராகிய இயேசு கிறிஸ்து மாம்சத்தின்படி இஸ்ரவேலர் என்று கூறுப வர்களுக்கு மாத்திரமல்ல, எங்களுக்காக மாத்திரமல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கின்ற பலியாக தம்மை ஒப்புக் கொடு த்தார். (1 யோவான 2:2). இந்த உலகத்திலே, இயேசுவினால் மீட்கப்பட்ட வர்களும், இன்னும் இயேசுவினால் மீட்பை பெறாத சன்மார்க்கரும்; (நல்வழி வாழ வேண்டும் என்று விரும்புகின்றவர்கள்) துன்மார்க்கரும், தேவன் இல்லை என்கின்ற மதிகேடரும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் யாவரும் மீட்பைப் பெற்றுக் கொள்ளும்படிக்கு இயேசு தம்மை ஒப்புக் கொடுத்திருக்கின்றார். அதாவது, விலைறேப்பெற்ற ஒரு அன்ப ளிப்பு பொருளானது, அழகாக பொதியிலே இடப்பட்டு, ஒவ்வொரு மனிதர் களுக்கும் இலவசமாக கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த அன்பளிப்பை ஒருவன் தன் சொந்த தீர்மானத்தின்படி ஏற்றுக் கொண்டால் அது அவனு க்குரியதாகும். ஒருவன் தன் சொந்த தீர்மானத்தின்படி அதை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அது அவனுக்குரியதல்ல. விலைமதிக்க முடியாத தம்முடைய திரு இரத்தத்தினால் உண்டான மீட்பை, கர்த்தராகிய இயேசு
யாவருக்கும் இலவசமாக கொடுக்கின்றார். அதை ஏற்றுக் கொள்பவன் அதனால் நித்திய வாழ்வை அடைந்து கொள்கின்றான். அதை ஏற்க மறுக்கின்றவன் தன் வாழ்வை நித்திய அழிவிற்கு ஒப்புக் கொடுப்பதால் அவன் மதிகேடனாகவே இருக்கின்றான்.
ஒருவரும் கெட்டுப் போகாமல் பாவத்திலிருந்து மீட்பை பெற்றுக் கொள்ளும்படிக்கு தேவன் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார்.
நினிவே என்னும் நகரத்தின் அக்கிரமங்கள் அதிகமாகயிருந்ததால், கர்த் தர் தம்முடைய ஊழியராகிய யோனாவை நோக்கி: நீ எழுந்து மகா நகர மாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்;. யோனா நகரத்தில் பிர வேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான். அப் பொழுது இதைக் கேள்விப்பட்ட நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள். பெரியோர்முதல் சிறி யோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள். இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக் கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். மேலும் ராஜா, தானும் தன் பிர தானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயிலெங்கும் மனு ஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிரு க்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும், மனுஷரும் மிரு கங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள். யாரு க்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ் தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும் புவார் என்று கூறச்சொன்னான். அவர்கள் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கை க்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார். (யோனா 3:1-10)
தேவன் தம்முடையவர்களைக் குறித்து பொறுமையுள்ளவராகவே இருக்கி ன்றார். இதனிமித்தமே, தான் உரைத்த தீர்க்கதரிசனம் நிறைவேறாததைக் கண்ட யோனாவுக்கு அது மிகவும் விசனமாயிருந்தது. அவன் கடுங்கோ பங்கொண்டு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்கு க்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன். இப்போதும் கர் த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயி ரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான். அதற் குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார். (யோனா 2:1-4)
ஆம் பிரியமானவர்களே, தேவனாகிய கர்த்தர் மிகுந்த மனதுருக்கமுடை யவர். மனிதர்கள் அழிந்து போவது அவருடைய சித்தம் அல்ல. எனவே மனிதர்கள் யாவரும் மனந்திரும்பும்படி நீடிய பொறுமையயுள்ளவராக இருக்கின்றார் (2 பேதுரு 3:9). இது தேவனுடைய கிருபையின் நாட்கள். இந்நாட்களிலே சில மனிதர்கள் துணிகரம் கொண்டு, தேவனுக்கு விரோ மாக பேசி, அநீதியின் கிரியைகளை நடப்பிக்கின்றார்கள். இதனால் இன் னுமொரு சாரர் அந்த அநீதியின் விளைவாக பல துன்பங்களுக்கு இலக் காகின்றார்கள். கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருகின்றது. மனிதன் எதை விதைக்கின்றானோ அதை அந்நாளிலே அறுத்துக் கொள் வான். மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொ ட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்ச த்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவி க்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான் (கலாத்தியர் 6:7-8). தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற் கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகி றார் (யூதா 1:15).
துயரப்படுகின்றவர்களை கர்த்தர் தேற்றுவார். அவர் கள் கண்ணீர் துடைக்கப்படும். அந்நாளிலே தேவனா னவர் அவர்கள் மத்தியிலே வாசமாயிருந்து அவர்க ளோடே கூட இருப்பார். (மத்தேயு 5:4, வெளி 21:4)
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலை யேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொ ண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமு டைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்;
ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விர லின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகி றேனே என்று கூப்பிட்டான். அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாச ருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். அது வுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களு க்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். அப்பொழுது அவன்: அப்படியா னால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேத னையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவ ர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித் தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன் னான் என்று ஆண்டவர் இயேசு கூறினார். (லூக்கா 16:19-31)
தேவ நீதியை உங்கள் வாழ்க்கையில் நடப்பிப்பதி னால் நீங்கள் துன்பப்படுத்தப்பட்டால் நீங்கள் பாக் கியவான்கள்.
ஆதிச் திருச்சபையிலே, வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டு களையும் காவலையும் அநுபவித்தார்கள்;. கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சை பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்ட ப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவ த்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;. உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளி லேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந் தார்கள். (எபிரெயர் 11:36-39) ஆகையால், மேகம்போன்ற இத்தனை திர ளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத் தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;. அவர் தமக்கு முன்வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத் தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். (எபிரெயர் 12:1-3)
ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளு ங்கள். பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத் தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே. (எபிரெயர் 12:3-4)
ஒருவேளை இன்று நீங்கள் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதிருந்தால், கொடுக்கப்பட்ட கிருபையின் நாட்களை பிரயோஜ னப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த உலகத்தின் வேஷம் கடந்து போகின் றது. மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது. வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே அது
இல்லாமற்போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது. (சங்கீதம் 103:15-16).
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பா ர்கள். (தானியேல் 12:2)
அதாவது, இந்த பூமியிலே பிறந்த யாவரும் ஒருநாள் மரிக்கவேண்டும். அப்படியாக மரித்தவர்கள் யாவரும் தேவனுடைய நாளிலே எழுந்திருப் பார்கள். அந்நாளிலே, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை செய்தவ ர்கள் நித்திய ஜீவனையும், பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை செய் யாதவர்கள் நித்திய நிந்தையையும் இகழ்ச்சியையும் (நித்திய ஆக்கினை) அடையும்படி எழுந்திருப்பார்கள்.
பிரியமானவர்களே, மீட்பராகிய இயேசு உங்களுக்கு கொடுத்த, விலை மதிக்க முடியாத அன்பளிப்பாகிய 'இரட்சிப்பின் நற்செய்தியை' நீங்கள் ஏற்றிருந்தால், நீங்கள் பாக்கியம் பெற்றவர்கள். அதை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். விசுவாசத்திலே நல்ல போராட்டத்தைப் போராடுங்கள். நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காக ஜீவகிரீடம் வைக்கப்பட்டிருக்கின்றது. அதை மகிமையின் நாளிலே தேவன் உங்க ளுக்கு தந்தருள்வார். அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். இந்த உலகிலே, உலக தத்துவங்களின்படி வாழும் மனிதர்களின், உலகில் ஞானமென்று கருதப்படுகின்ற மதீயீன மான பேச்சுக்களால் சோர்ந்து போய்விடாதிருங்கள். வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்ப தைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிரு ப்பதே நலம். (பிரசங்கி 4:6). நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண் டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்தி லுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்மு டைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள் (கொலோசேயர் 3:1-4). எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதித hக்கப்படுகிறது. மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவை களை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவை கள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்க ளின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவர் உங்கள் ஸ்திரப்படுத்தி, திடப்படுத்தி வழிநடதிச் செல்வாராக. ஆமேன்!