கர்த்தர் என் மீட்பராய் இருக்கின்றார்

Posted on September 07, 2021 01:08:18

கர்த்தர் என் மீட்பராய் இருக்கிறார் என்ற சங்கீதமானது மிகவும் பிரபல மானதோர் சங்கீதமாகும்.

அடக்க ஆராதனைகளிலே இதை எப்போதும் பாடுவார்கள். ஓர் அடக்க ஆராதனைக்குச் சென்றிருந்தேன். அங்கு இப்பாடலை மிக அழகாகப் பாடி னார்கள். அப்போது எனதருகில் இருந்தவர் அப்பாடலைக் கேட்டு, எத்தனை அழகான பாடல் ஏன் இதை மரணவீட்டில் அதிகமாய்ப் பாடுகிறார்கள் என்றார். உண்மையிலே இப்பாடல் மிகவும் அழகானதும் ஆறுதலையும் நம்பிக்கையை தருகின்றதான வசனங்களைக் கொண்டுள்ளது. மரணம் என்பது மனிதருக்கு மிகவும் குறுகிய நேரத்தில் மிகப்பெரிதான நோவை ஏற்படுத்தும் நிகழ்வாயுள்ளது. அங்கு இவ்வார்த்தைகள் மிகுந்த ஆறுதலைக் கொடுக்கின்றன. அதினாலே அங்கு இப்பாடலை எப்போதும் பாடுகின்றா ர்கள்.

தாவீது இராஜா தனது வாழ்க்கையிலேயே இப்பாடலைப் பாடினார். இப்புதிய வருடத்தை நாம் ஆரம்பிக்கும் போது, பலவிதமான நிச்சயமற்ற நிலைமை கள் உலகத்தைச் சூழ்ந்து நெருக்கி நிற்கின்றது. புதிய வருடம் ஆரம்பிக்கும் போது இவ்வருடத்திற்கான வாக்குத்தத்தம் என்ன என்று கேட்பவர்களுண்டு.

தேவனுடைய பிள்ளைகளுக்கு தேவனின் வாக்குத்தத்தங்கள் யாவும் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றது. ஒரு வாக்குத்தத்தமல்ல எல்லா வாக்குத்தத்தங்களும் உங்களுடையதே. தனது ஜீவனையே எமக்காக ஈந்தவர் மற்ற நன்மைகளையும், வாக்குத்தத்தங்க ளையும் எமக்கு விலக்குவாரோ? அவர் நிச்சயமாக ஆசீர்வதிக்கின்றவ ராகவே இருக்கின்றார்.

வாழ்க்கையிலே சவால்கள் எப்போதுமே நமக்கு வருவதுண்டு. ஆனால் தேவனின் வாக்குத்தத்தமோ அவை எல்லாவற்றிலும் பெரிதானதாய் எங் கள் சார்பிலுள்ளது.

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாய ம் பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”

என்று இஸ்ரவேலுக்கு வாக்குரைத்தவர் உங்களுடனேயிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.          

ஆகையால் தைரியங்கொண்டு தாவீதை போன்று அறிக்கையிடுவோம்.

 

சங்கீதம் 23

“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.

அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.

அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் உமது தடி யும் என்னைத் தேற்றும்.

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.”

இம்மட்டும் காத்தவர் எபிநேசர், இம்மானுவேலராய் எம்முடனே கூட இருக்கின்றார். பரிசுத்த பவுல் தெசலோனிகேயருக்கு எழுதின நிருபத்தில் குறிப்பிட்டுள்ளபடி,

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணு ங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள். அப்படிச் செய் வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.” 1 தெச 5:16-18

பிரியமான சகோதரனே சகோதரியே,

சகலவிதமான ஆறுதல்களின் தேவன் இப்புதிய வருடத்தில் உங்களை ஆசீர்வதித்துக் காத்துக்கொள்வாராக.

எம்மோடு கூட ஜெபிக்க விரும்பினால் ஞாயிறு காலை 10:00 மணிக்கு நேரலையில்  www.gtachurch.ca/live இணையதளத்தின் வழியாக தேவ ஆராதனையில் கலந்து கொள்ளும்படி உங்களை அழைக்கின்றேன்.