Posted on January 02, 2021 03:16:24
“என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குச் காண்பிப்பேன்.
ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட் டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான், பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று, ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான், நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது” என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கூறியுள்ளார்.
இங்கு பரீட்சையானது ஒரே விதமாய் இருவருக்கும் சம்பவித்தது. அது அவர்களின் கிரியைகளில் தங்கியிருக்கவில்லை. ஆனால் அப்பரீட்சை யின்; முடிவானது அவனவனின் கிரியையிலே தங்கியுள்ளது. ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு வீட்டைக்கடடின மனுஷன் பிழைத்துக்கொண்டான், மற்றவனோ முழுவதுமாய் நஷ்டமடைந்தான்.
தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது. கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது என்றும் எழுதியிருக்கின்றது.
ஆகாப் இராஜாவின் நாட்களிலே அவன் மனைவியான யேசபேல் தேவனுக்கு விரோதமான அநேக காரியங்களை செய்து இஸ்ரவேலிலே தேவனுடையவர்கள் தேவனைப்பற்றும் விசுவாசத்திலிருந்து வழுவிப்போக ப்பண்ணி கேடுண்டாக்கிக் கொண்டிருந்தாள். அவள் தேவனுடைய தீர்க்கதரிசியான எலியாவிடத்தில் ஆள் அனுப்பி, அவனைக் கொலை செய்யப்போவதாக சூளுரைத்தாள்.
அப்பொழுது எலியா, ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதம்மட்டும் போனான். அங்கு தேவன் எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என் றார். அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன், இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படி க்கையைத் தள்ளிவிட்டார்கள், உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிறவாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்று தேவன் எலியாவிடத்தில் கூறினார்.
தேசம் முழுவதுமாய் சோரம்போய் தேவனுக்கு விரோதமாக நடந்துகொண்டிருந்தது. ஆனாலும் தேவனுடையவர்கள் ஏழாயிரம்பேர் இஸ்ரவேலிலே காக்கப்பட்டிருந்தார்கள். தேவன் அவர்களை அறிந்திருந்தார்.
இந்நாட்களில், இதற்கொத்ததாய் சூழ்நிலைகள் காணப்பட்டாலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது. தேவன் தம்முடையவர்களையும் அவர்களின் எண்ணிக்கையையும் அறிவார். அந்த எண்ணிக்கையில் நாமும் காணப்படும்படி அசையாத நிலையான கன்மலையாகிய இயேசுகிறிஸ்துவின் மீது கட்டப்பட்டவர்களாயிருப்போமாக.
நேபுகாத்நேச்சார் என்ற இராஜவுக்குக் காண்பிக்கப்பட்ட தரிசனத்தை தீர்க்கதரிசியான தானியேல் விளக்கிக் கூறினார். தானியேல் 2:1-49. அதில் பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதி ல்லை. ஒரு கல்கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து உருண்டு வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என் றென்றைக்கும் நிற்கும்.
அது இயேசுகிறிஸ்துவின் நிலையானதும் அழிவில்லாததுமான இராஜ்ஜியமே.
பிரியமான சகோதரனே சகோதரியே,
நாம் ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கி, இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படு த்தின பிதாவாகிய தேவன் என்றென்றும் உண்மையுள்ளவர். கர்த்தரில் நிலைத்திருங்கள். அவர் உங்களை ஆசீர்வதித்துக் காத்துக்கொள்வாராக.