Beauty of the temple Tamil Christian Article ஆலயத்தின் அலங்காரம்

Posted on January 02, 2021 03:25:33

ஒரு வியாபாரி, தெரு வழியே, வீடுகள் தோறும் சென்று தன் பிழைப்பிற்காக மீன் வியாபாரம் செய்து வந்தான். ஒரு நாள், குறிப்பிட்ட தெருவிலே வாழ்ந்து வந்த மனிதன், அந்த வியாபாரியை அழைத்து, அவனிடமிருக் கும் மீன்களை பார்த்தான். அந்த வியாபாரி, அந்த மனிதனை நோக்கி: இந்த மீன்கள், இன்று அதிகாலையிலே பிடிக்கப்பட்ட மீன்கள் என்று கூறி, அவற்றுள் சிலவற்றை தெரிந்து அந்த மனிதனிடம் கொடுத்தான். அவனும் குறிப்பிட்ட பணத்தை கொடுத்து அதை கொள்வனவு செய்தான். அந்த வியாபாரியும் தன் வழியே போய் விட்டான். அவனுடைய மனைவியானவள், அந்த மீன்களை சமைப்பதற்காக பையிலிருந்து வெளியே எடுத்த போது, அவை பழுதடைந்த மீன்கள் என்று கண்டு கொண்டாள். அவை நாற்றமெடுக்க ஆரம்பித்தது. அந்த மீன்களை நீங்கள் கொள்வனவு செய் திருந்தால், அவற்றை என்ன செய்வீர்கள். கொடுத்த பணமும் நஷ்டமாக போய்விட்டதே அதனால் அவற்றை வீட்டிற்குள் வைத்திருக்க முடியுமா? அப்படியாக அந்த நாற்றமெடுக்கும் மீன்களை வீட்டில் வைத்திருந்தால், யாருடைய வீடு நாற்றமெடுக்கும்?  அந்த வியாபாரி கூறிய விடயங்கள் உண்மையாக இருக்கலாம் அல்லது பொய்யாக இருக்கலாம். அவை ஒருபக்கம் இருக்க, முதலாவதாக பழுதடைந்து நாற்றமெடுக்கும் அந்த மீன்களை உங்கள் வீட்டைவிட்டு அகற்றிவிட வேண்டும். அதுவே மே லானதொரு முடிவாகும்.

இந்த பூமியிலே நாங்கள் வாழும் நாட்களிலே பல மனிதர்களோடு இடை ப்படுகின்றோம். நாளாந்தம் வீட்டிலே குடும்ப அங்கத்தவர்களோடு வாழ் ந்த வருகின்றோம். வெளியே வேலை செய்யும் இடங்களில் அல்லது பாட சாலைகளில் அதிகபப்டியாக நேரத்தை செலவிடுகின்றோம். அயலவர்க ரளையும், நண்பர்களையும், உறவினர்களையும் அடிக்கடி சந்திக்கின் றோம். சபையின் உடன் விசுவாசிகளை வாரந்தோறும் சந்தித்து வருகின் றோம்;. கடைத் தெருக்களிலே அறிமுகமானவர்களையும், அறிமுகமாகாத அந்நியர்களையும் சந்திக்க நேரிடுகின்றது.  அந்த சந்திப்புகள் யாவும் எல்லா நேரங்களிலும் சமாதானத்திற்குரியதாக இருப்பதில்லை. சில வேளைகளிலே கருத்து முரண்பாடுகளும், வாக்குவாதங்களும், சண்டைக ளும், பரியாசங்களும் ஏற்படுவது சகஜம். இதனால் மனிதர்களுடைய இருயத்திலே கசப்பு, வன்மம், பகை, வைராக்கியம், பிரிவினை போன்ற மாம்ச த்திற்குரிய சுபாவங்கள் தோன்றுகின்றன. ஒரு வேளை மற்றவர்கள் கார ணமின்றி உங்களை துன்பப்படுத்தலாம், அவதூறு பேசலாம் அல்லது காரணத்தோடுகூட உங்களை நகைத்து பகைக்கலாம். அவை ஒருபக்கம் இருக்க, உங்கள் இருதயத்தில் தோன்றியிருக்கும் மாம்ச கிரியைகள் தங்கும் வீடாக உங்கள் இருதயத்தை நீங்கள் திறந்து கொடுப்பீர்களாக இருந்தால், யாருக்கு நஷ்டம்? யாருடைய இருதயத்தில் தேவ சமாதானம் ஆட்கொள்ளாமல் உலகத்தின் பிரிவினை ஆட்கொள்ளும்? சற்று சிந்தித் துப் பாருங்கள். 

ஆலயத்திற்கு செல்லும் மனிதர்கள் ஆலயத்தை சுத்தம் செய்து அதை அலங்கரிக்கும்படிக்கு, பார்வைக்கு அழகானதும், மனிதர்களை கவர்ந்து கொள்ளும் தளபாடங்களையும், அலங்கார பொருட்களையும் வைக்கின்றார்கள். நாங்கள் யாவரும் கூடி தேவனை ஆராதிக்கும் இடத்தை சீராகவும், சிறப்பாகவும் வைத்திருப்பது மிகவும் நல்லது. எங்கள் தேவனாகிய கர்த்தர் கட்டிடங்களிலே வாசம் செய்பவர் அல்லர். தேவ ஜனங்கள் கூடும் நேரத்திலே அவர்கள் மத்தியிலே அவர் உலாவுகின்றவராக இருக்கின்றார். ஆலய கட்டிடம் சுத்தமாகவும், மனிதர்களுடைய இருதயம் அசுத்தமாகவும் இருக்குமென்றால் அதனால் என்ன பலன்? 

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கின்றாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?  ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம். அந்த ஆலத்திற்குள் பரிசுத்த அலங்காரம் இருக்க வேண்டும். இருதயத் திலே கசப்பு, வன்மம், பகை, வைராக்கியம், பிரிவினை போன்ற மாம்ச த்திற்குரிய சுபாவங்களானது பரிசுத்த அலங்காரத்தை கெடுத்து விடும். 

“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என் னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக் கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாம லும் இருப்பதாக.” 

என்று இயேசு கூறியிருக்கின்றார். (யோவான் 14:27)வாழ்க்கையில் எதிர் நோக்கும் பிரச்சனைகளால், மனி தர்கள் தேவ சமாதானத்தை இழந்து போவதைக் குறித்து கருத்தற்றவர்களாக, அற்பமான விடயங்களுக்காக அதை விற்றுப் போடுகின்றார்கள். அதை விற்று, அதற்கு பதிலாக மன திலே பெரும் பாரங்களை ஏற்றுக் கொள்கின்றார்கள். உயிர் வாழும்வரை வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்கமுடியாதவைகள். அதை மேற்கொள் ளும்படிக்கு  “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்ப ங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெப த்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப் பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருத யங்களையும் உங்கள் சிந்தைக ளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”  (பிலிப்பிர் 4:5-6) என பரிசுத்த வேதாகமம் அறிவுரை கூறுகின்றது. 

இன்னுமொரு மனிதன், தேவனுடைய பிரமாணங்களை மீறி, எங்களுக்கு தீமை செய்து விட்டதால், நாங்களும் தேவனுடைய பிரமாணங்களை மீறி, கோபங்களையும் பிரிவினைகளையும் தேவன் தங்கும் ஆலயமாகிய எம்மில் வைத்துக் கொள்ளவது சரியாகுமோ? நீங்கள் கோபங்கொண் டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது. அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளு க்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத்துக் கப்படுத்தா  திருங்கள். சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்து வுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக் கொருவர் மன்னியுங்கள். (எபேசியர் 4:27, 30-32, வெளி 22:11)
        
 ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதன் தன் இளமைக்காலத்திலிருந்தே, எந்த ஒரு விஷயத்திலும், அல்லது எந்த ஒரு மனிதனிலும்; குறையை கண்டுபிடித்துக் கொண்டேயிருந்தான். அவனது இளமைக் காலத்திலே, அது அவனுக்கு ஒரு சுவாரசியமான செயலாக இருந்தது. ஆண்டுகள் கடந்து சென்றதும், அது அவனுடைய சுபாவமாக மாறிவிட்டது. அவன் இருதயம் மற்றவர்களுடைய குறைவுகளினாலே நிறைந்திருந்து. இப்படிப் பட்ட சுபாவமானது ஆன்மீக நோயாக மாறிவிடுகின்றது. “சுத்தமுள்ளவ ர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசு வாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.” (தீத்து 1:15). இந்த உலகிலே குறை வுகள் உண்டு என்பது உண்மை. சாத்தானானவன் குற்றம் சாட்டுகின்ற வனாக இருக்கின்றான். ஆனால் இயேசுவோ குற்றத்திலிருந்து மனிதர்க ளை விடுதலையாக்கும்படிக்கு வந்தார். அவர் தம்மிடத்திலிருந்த தேவ ஒளியை எங்கள் மேல் பிரகாசிப்பிக்கச் செய்தார். 

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போ னால், எதினால் சாரமாக்கப்படும்? 

வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கி றீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. வுpள க்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. என்று இயேசு கூறி யிருக்கின்றார். (மத்தேயு 5: 13-16).
 
தேசத்தின் பாரம்பரிய சொத்துக்களை நூதன சாலையிலே பார்வைக்கு வைத்து வைப்பார்கள். அவ்வண்ணமாக மனிதர்களிலே பலர், தங்கள் பரம்பரை, குடும்ப கௌரவம், பாரம்பரியம், உலக அந்தஸ்து, உலக அறிவு போன்றவற்றினால் தங்கள் இருதயங்களை நிரப்பி விடுகின்றா ர்கள். தேவன் தங்கும் ஆலயமாகிய இருதயத்தை நூதன சாலைகளாக மாற்றிவிடுகின்றார்கள். இந்த பாரம்பரியமும் கௌரவமும் தேவனால் அழைப்பை பெற்றவர்களையும் வஞ்சித்துக் கொள்கின்றது. என்னுடைய பாட்டனார் உலக பிரசித்தி பெற்ற சுவிசேஷகர், என் தந்தை பெரிய ஆலயமொன்றிலே போதகராக இருக்கின்றார் என்று தங்கள் தராதரங்  களை உயர்த்தி வைக்கின்றார்கள். இதனால் பெருமை அவர்கள் இருதய ங்களை ஆட்கொண்டு விடுகின்றது. தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.  பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷ ரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.  வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம் பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்கு ள்ளே ஜெபம்பண்ணினான்.  ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.  மதவைராக்கியம் நிறைந்த பரிசேயனல்ல, பாவியென்று சமுதா யத்தினால் புறக்கணிக்கப்பட்டவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட் டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெ னில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்து கிறவன் உயர்த்தப்படுவான் என்று இயேசு கூறியிருக்கின்றார். (லூக்கா 18:10-14)

அக்காலத்திலே வாழ்ந்த, பரிசேயர் என்னும் குழுவை சேர்ந்தவர்கள் மிகவும் மத வைராக்கிமுள்ளவர்களாக இருந்தார்கள். வாக்களிக்கப்பட்ட மெசியா (மீட்பர்) வெளிப்படும்படி காத்திருந்தார்கள். ஆனால், இவர்க ளில் அநேகமானோருடைய இருதத்திலே பெருமை நிறைந்திருந்ததால், அவர்கள் எதிர்பார்ந்திருந்த மெசியாவாகிய இயேசு வெளிப்பட்ட போது, அவர் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்பதை உணரமுடியாமல் அவர்க ளின் மனக் கண்கள் அவர்களுடைய பெருமையினால் குருடாகிப் போயி ருந்தது.  

ஒரு சமயம் கர்த்தராகிய இயேசு பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டு அவனை குணமாக்கி பார்வையடையும்படி செய்தார். அதைக் கேள்வி ப்பட்ட பரிசேயரின் குழுவை சேரந்தவர்கள், இயேசுவின் மேல் குற்றம் பிடிக்கும்படிக்கு, அவனை அழைத்து: நீ எப்படிப் பார்வையடை ந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன் இயேசு தன்னை குணமாக்கிய விதத்தை அவர்களுக்கு கூறினான். மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான். அவர்கள் அதை நம்ப மறுத்தார்கள். அவனை மறுபடியும் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து. இந்த மனுஷன் (அவர்கள் எதிர்பார்த்திருந்த மெசியாவாகிய இயேசுவை) பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என் றார்கள். அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற்போனீர்கள்; மறுபடியும் கேட்கவேண்டியதென்ன? அவரு க்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான். அப்பொழுது அவர் கள் அவனை அவமதித்து: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயி னுடைய சீஷர்.  மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள்.  அதற்கு அந்த பார்வையடைந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.  பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந் திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமா னதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.  பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானதுமுதல் கேள்வி ப்பட்டதில்லையே. அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.  அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழு வதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொ ல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்.

                                       
அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவ னைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக் கிறாயா என்றார்.  அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசு வாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.  இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார். உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான். தன் பிறந்த நாளிலே இருந்தே மாம்ச கண்கள் குருடாகியிருந்த அந்த ஏழை மனிதன் இந்த உலக முறைமை யின்படி கல்லாதவனாக இருந்தான். இந்த உலகத்திலே எந்த தராதரமும் அற்றவன். ஆனால் இயேசுவே மெசியா என்பதை அறிந்து கொண்டான். ஆனால், மத வைராக்கியமுள்ளவர்களும், இந்த உலக முறைமையின்படி கற்று தேர்ந்தவர்களும் தங்கள் இருதயங்களில் வைராக்கியத்தையும் பெருமையையும் ஆளும்படி இடங் கொடுத்ததால் அவர்களால் இயேசு யார் என்பதை அறிய முடியாமல் போய்விட்டது.

பிரியமானவர்களே, எங்கள் இருதயத்தில் நிறைந்திருக்கும் காரியங்கள் என்ன என்பதை நீங்கள் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்?  

விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில் லிசூனியம், கொலைகள், வெறிகள், களியாட்டங்கள் மட்டும் மாம்சத்தின் கிரியைகள் அல்ல. மனிதனுடைய இருதயத்தில் மறைந்திருக்கும் பகை கள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவி னைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள் யாவும் மாம்சத்தின் கிரியைகளே. அது மட்டுமல்ல, உலக ஐசுவரியம், கல்வி, சமூக அந்த ஸ்து போன்றவற்றினால் மனிதனுடைய இருதயத்தில் குடிகொள்ளும் பெருமையும் மனிதர்களை தேவனைவிட்டு தூரமாக கொண்டு சென்று விடுகின்றது.

தேவனுடைய தங்கும் ஆலமாகிய உங்கள் சரீரத்தை தூய்மையாக காத்துக் கொள்ளுங்கள். இன்னுமொருவன் அந்த ஆலயத்தை அசுத்த ப்படுத்த இடங் கொடாதிருங்கள். “உங்கள் சத்துருக்களைச் சிநேகியு ங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பi கக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களு க்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண் ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்;” என்று இயேசு கூறியிருக்கின்றார். 

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்க ளின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவர் உங்கள் ஸ்திரப்படுத்தி, திடப்படுத்தி வழிநடதிச் செல்வாராக. ஆமேன்!