பாக்கியவான்களின் ஆசீர்வாதங்கள்

Posted on January 03, 2020 15:18:29

புதிய ஆண்டிலே பிரவேசித்துள்ள நாம் பாக்கியவான்களாய் வாழ்ந்து பாக்கியவான்களுக்குரிய ஆசீர்வாதங்களில் பங்குள்ளவர்களாகுவோம்.

 

பாக்கியவான்களின் ஆசீர்வாதங்களைக் குறித்து இயேசு கூறும்போது:

 

  • அவர்கள் ஆறுதலடைவார்கள்,
  • அவர்கள் திருப்தியடைவார்கள்,
  • அவர்கள் இரக்கம் பெறுவார்கள்,
  • அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்,
  • அவர்கள் பலன் மிகுதியாயிருக்கும்,
  • அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்,
  • அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்,
  • பரலோகராஜ்யம் அவர்களுடையது என்று அறிவித்துள்ளார்.

 

இவையாவும் இவ்வுலகத்தினால் உண்டாகாமல் சர்வ வல்லமையுள்ள தேவனைத் தேடுபவர்களுக்கு உண்டாகும் ஆசீர்வாதங்களாகும்.

 

இவற்றுக்கு பங்குள்ளவர்களான பாக்கியவான்கள் யார்? தமது வாழ்வில்

 

  • ஆவியில் எளிமையுள்ளவர்களாய் இருந்து தேவனைத் தேடுபவர்கள்,
  • துயரப்படுகிறவர்களாய் இருந்தும் தம் தேவனைத் தேடுபவர்கள்,
  • நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாய் இருந்து தேவனைத் தேடுபவர்கள்,
  • இரக்கமுள்ளவர்களாய் இருந்து தேவனைத் தேடுபவர்கள்,
  • சாந்தகுணமுள்ளவர்களாய் இருந்து தேவனைத் தேடுபவர்கள்,
  • இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாய் இருந்து தேவனைத் தேடுபவர்கள்,
  • சமாதானம்பண்ணுகிறவர்களாய் இருந்து தேவனைத் தேடுபவர்கள்,

 

இயேசுவின் நிமித்தம் நிந்திக்கப்பட்டும் துன்பப்படுத்தப்பட்டும், பலவித தீமையான மொழிகளையும் பொய்யாய்ச் சொல்ப்பட்டபோதும் சந்தோஷ ப்பட்டு, களிகூருபவர்கள்.
தம் சூழ்நிலைகள் தமக்கு விரோதமாய் இருந்தாலும் தேவ பிரியராய் வாழ்வேன் என்ற உறுதியான தீர்மானத்தோடு தேவனைத் தமது வாழ் வில் அடை க்கலமாய்க்கொண்டு வாழ்பவர்கள்.
 
 

இவ்வாழ்வை வாழ்வதற்கு வழிமுறைதான் என்ன?

 

  • இப்புதிய வருடத்தில் எமது பிரதிஷ்டைகளை புதுப்பித்துக் கொள்வோம்.
  • நாள்தோறும் வேதத்தை வாசித்து அதைத் தியானிப்போம்.

 

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரா மலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான், அவன் செய்வ தெல்லாம் வாய்க்கும்.

நமது ஜெபவாழ்வை உறுதிப்படுத்தி நாள்தோறும் ஜெபிப்போம்.

நான் கர்த்தihத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என் னுடைய  எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். அவர்கள் அவih நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
சபைகூடிவருதலை விட்டுவிடாமல் உறுதியாய் ஐக்கியத்தில் நிலைத் திருப்போம்.
 
நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வள ர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும் வரைக்கும், பரிசுத்தவா ன்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்கா கவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற் காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்கதரிசிகளா கவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதக ராகவும் ஏற்ப்படுத்தினார். நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷரு டைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களா யிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு, தலையாகிய கிறிஸ் துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர் களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
 
பிரியமான சகோதரனே சகோதரியே,
தேவன் பலனளிக்கின்றவர். அவர் தம்மை ஓருபோதும் கடன்காரனாக வொட்டார். மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படு ம்படி ஒருவரையொருவர் கவனித்து, சபை கூடிவருதலைச் சிலர் விட்டு விடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொ ல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கி றீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். இப்புதிய வருடத்திலே தேவகிருபை உங்களிலும் உங்கள் குடும்பத்திலும் பெருகுவதாக.

எம்மோடு கூட ஜெபிக்க விரும்பினால் ஞயிறு காலை 10:00 மணிக்கு தேவ ஆராதனையில் கலந்து கொள்ளும்படி உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.