நமக்கொரு பாலகன் பிறந்தார்

Posted on December 03, 2019 01:19:39

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூர்ந்து கொண்டாடும் மாதமாக மார்கழி மாதம் விளங்குகின்றது. கிறிஸ்தவ நாட்காட்டியில் பல நிகழ்வுகள் ஓவ்வொரு வருடத்திலும் நினைவு கூரப்படுகின்றன. இவை அவசிய மானதா என்ற கேள்வி சில மனிதர்களின் உள்ளத்தில் எழும்புவதுண்டு.
 
இவையாவும் எமக்கு தேவையானவையே. இந்த நிகழ்வுகள் ஓவ்வொன் றும் மனுக்குலத்தின் மீட்ப்பைக் குறித்து அவை நடைபெறுவதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பதாக தேவன் தமது ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளின் மூலம் அறிவித்ததும், அத்தீர்க்கதரிசனங்களை அறிந்த வர்கள் மீட்பின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்திருதவையுமாம்.
 
இந்நிகழ்வுகளை நினைவுகூரும் போது, பிதாவாகிய தேவனின் வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலையும் அவர் மனுக்குலத்திற்குக் காண்பித்த அவரது அன்பையும் இரக்கங்களையும் கிருபைகளையும் கொண்டாடுகின்றோம்.
 
இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது தேவனால் தீர்க்கதரிசனமாய் அறிவிக் கப்பட்டதொன்று. மனுக்குலத்தை பாவத்திலிருந்து விடுவிக்கவும், சாபத்தின் வேரறுத்து அவர்கள் தேவ ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள் ளவும், அவர்களைத் தேவ பிள்ளைகளாக்கவுமே கர்த்தராகிய இயேசு இப் புவியில் பிறந்தார்.
 
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரன் இயேசுகிறிஸ்துவை விசுவாசி க்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்ப டுவதற்காகவே அவரை அனுப்பினார் என்று பரிசுத்த வோதாகமத்திலே இயேசு கூறியுள்ளதைக் காண்கிறோம்.
 
எனவே இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதன் நோக்கமானது தேவன் எமக்கு காண்பித்த அவரது அன்பையும் அவர் எமக்கு உண் டுபண்ணியுள்ள அவரது இரட்ச்சிப்பையும் உயர்த்தி அவருக்கு நன்றி சொல்லுவதாகும். 
 

இந்த உலகமானது இரண்டு பேரை சந்திக்க மிக வேகமாக அந்த நாளுக்கென்று ஆயத்தமாகுகின்றது.

தேவனுடையவர்கள் இயேசுகிறிஸ்துவானவர் வரும் நாளுக்காகத் தங் களை ஆயத்தம் செய்கின்றார்கள். மற்றவர்களோ அறிந்தோ அறியாமலோ அந்திகிறிஸ்துவின் நாளுக்கென்று தம்மை ஆயத்தப்படுத்துகின்றார்கள்

நித்திய ஜீவனை விரும்புகின்ற ஓவ்வொருவரும் அதை அடை ந்துகொள்ளும்படி கிறிஸ்துவின் நாளுக்காக ஆயத்தப்படுவது இன்றியமையாத தொன்றாகும்.
கிறிஸ்துவின் நாளுக்கென்று ஆயத்தப்படுபவர்கள் அந்நாளிலே துப்பரவானவர்களும் இடறலற்றவர்களுமாய் காணப்படும்படி ஆயத்தப்பட வேண்டும்.
 
இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் நாங்கள் துப்பரவானவர்களும் இடறலற்றவர்களுமாய் தேவன் தந்த பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்து இயேசுவின் பிறப்பை மனமகிழ்சியுடன் கொண்டாட வேண்டும்.
 
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும் என்று தீர்க்கதரிசி மூலமாய் தேவன் இயேசுவின் பிறப்பை எமக்கு அறிவித்தார்.
 
மேலும், தேவதூதன் மரியாளிடத்தில் அவர் பிறப்பைக் குறித்து கூறும் போது, இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னத மானவருடைய குமாரன் என்னப்படுவார் என்று கூறினான்.
 
பெரியவரும் உன்னதமானவருடைய குமாரனுமான இயேசு அதிசயமானவரும், ஆலோசனைக்கர்த்தரும், வல்லமையுள்ள தேவனும், நித்திய பிதாவும், சமாதானப்பிரபுவுமானவர்.
எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தையுடைவரான இயேசுவின் பிறப்பை எல்லா நற்பண்புகளுடனும் கொண்டாடுவோமாக.
 
பிரியமான சகோதரனே சகோதரியே,
இயேசு சிறுமைப்பட்டவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கின்றார், இருத யம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுகின்றார், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்குகின்றார், கட்டுண்டவர்களை  கட்டவிழ்க்கின்றார். அவரை நோக்கிக் கூப்பிடு. அவர் பதில்தரும் தெய்வம். எனக்கு நன்மையளிப் பார். 
 

எம்மோடு கூட ஜெபிக்க விரும்பினால் ஞாயிறு காலை 10:00 மணிக்கு தேவ ஆராதனையில் கலந்து கொள்ளும்படி உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.