Posted on October 31, 2019 23:54:16
மனித வாழ்வில், ஆதரவு எல்லோருக்கும் மிகவும் தேவையானதொன்று. ஏனெனில் ஆதரவினாலே வாழ்வில் ஆறுதல் உண்டாகின்றது. தன் கண வன், தனக்கு ஆதரவாய் இருக்கும்போது மனைவியானவள் ஆறுத லடை கின்றாள். தன் மனைவி, தனக்கு ஆதரவாய் இருக்கும்போது கணவனான வன் ஆறுதலடைகின்றான். பெற்றோரும் தம் பிள்ளைகளின் ஆதவரவினா லும், பிள்ளைகளும் தம் பெற்றோரின் ஆதரவினாலும் ஆறுதலடைகின்றா ர்கள்.
ஆதரவின்றி அல்லலுறும் மனிதர்கள் அநேகர். தள்ளப்பட்டும், புறக்கணி க்கப்பட்டும் வாழ்வில் அமைதியின்றி வாடுபவர் பலர்.
இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் எரிகோவுக்கு வந்திருந்தார் கள். பின்பு அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரி கோவை விட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிரு ந்தான்.
அவன் இயேசுகிறிஸ்து வருகிறாரென்று கேள்விப்பட்டு; இயேசுவே, தாவீ தின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். அவ னைப் பேசாதிருக்கும்படி அநேகர் அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
அப்போது இயேசு நின்று, அவனை அழைத்து வரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, இயேசு உன்னை அழைக்கிறார் என்றார்கள். அவன் இயேசுவிடம் வந்து பார்வையடைந் தான்.
ஆதரவற்ற அவனுக்கு இயேசு ஆதரவானார். இதனிமித்தம் அவன் சரீர த்தில் ஆரோக்கியத்தையும், வாழ்வில் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண் டான். பணமுமின்றி விலையுமின்றி அவற்றைப் பெற்றுக்கொண்டான். எல்லா சிருஷ்டிக்கும் ஆண்டவரும் காரணருமாகிய இயேசுகிறிஸ்துவிடம் அதைப் பெற்றுக்கொண்டான்.
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்று சொல்லி இயேசு எல்லோரையும் அழைக்கின்றார். அவர் பட்சபாதமுள்ள வரல்லர்.
அவர் நிச்சயமாய் ஆறுதல் தருகின்றவராயுள்ளார். இயேசு கிறிஸ்து நேற் றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
தொலைந்து போனதை தேடி கண்டுபிடிக்கவும், மீட்கவும் இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்தார். தேவனுடைய அன்பையும் பாதுகாப்பை யும்விட்டு தூரமாய்ப் போய் தொலைந்துபோன ஓவ்வொருவருக்குமாய் இயேசுகிறி ஸ்து வந்தார். தொலைந்து போனதை கண்டுபிடிக்குமளவும் தேடுகின்ற மேய்ப்பனாக அவர் நம்மைத் தேடுகின்றார்.
தொலைந்து போன நிலையென்பது; வாழ்வில் ஆதரவற்று இனி என்ன செய்வதோ, எங்கே போவதோ என்று தெரியாத நிலைமை. இது வயது வேறுபாடின்றி மனிதரைப் பற்றிக்கொள்ளும். இன்று, நீ உன் வாழ்வில் தொலைந்து போய்விட்டதாய் உணருவாயாகில்; கலங்காதே, எழுந்திரு, இயேசு கிறிஸ்து உன்னை அழைக்கின்றார். உனக்கு ஆறுதல் தருவார்.
கூப்பிடும் யாவருக்கும் இரங்கும் தேவனானவர் தம்மை நோக்கி உண் மையாய் கூப்பிடும் ஓவ்வொருவருக்கும் பதில் கொடுத்து அவர்களை ஆதரிக்கின்றார்.
தேவனையே நம்பி, அவரைப் பற்றிக்கொண்டவனைக் குறித்து, அவன் என் னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன், என் நாம த்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்க லத் திலே வைப்பேன் என்று தேவன் சொல்லியுள்ளார்.
தேவன் உன்னைக் காக்கிறவர், அவர் உறங்குவதுமில்லை தூங்கு கிறது மில்லை. அவர் உன் காலைத் தள்ளாடவிடுவதில்லை. அவர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்.
பிரியமான சகோதரனே சகோதரியே,
இயேசுகிறிஸ்து மனிதரை இரட்சிக்கவே உலகிற்கு வந்தார். நாம் சந்தோ ஷம், சமாதானத்தோடு வாழ நமது கரத்தைபபிடித்து நடத்துகின்றார். நல்ல மேய்ப்பன் கறவலாடுகளை மெதுவாய் நடத்தி குட்டிகளை தனது தோளில் சுமப்பது போல இயேசுவும் நம்மை விடுவித்து நடத்துகின்றவரா யுள்ளார்.
எம்மோடு கூட ஜெபிக்க விரும்பினால் ஞயிறு காலை 10:00 மணிக்கு தேவ ஆராதனையில் கலந்து கொள்ளும்படி உங்களை அன்போடு அழைக்கின்றேன்.