Posted on March 29, 2017 14:54:19
ஒரு முதியவர் உதவி வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தார். அவ்விளம்பரத்தைப் பார்த்த ஒரு வாலிபன் அவரைத் தேடிச் சென்று அம்முதியவரோடு பேசினான். முதியவர் அவனிடம், தனது வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். எனக்குதவ உன்னால் முடியுமா? நான் உனது உழைப்புக்குக் கூலி தருகிறேன் என்று ஒப்பந்தம் செய்தார். அவ்வாலிபனும் அதை ஏற்றுக்கொண்டு வேலையை ஆரம்பித்தான். அவ்வீடு அநேக பொருட்களினால் நிறைந்திருந்தது. அதைக்கண்டு ஆச்சரியமடைந்த வாலிபன் அவரிடத்தில் விசாரித்தான். அப்போது அவர் தனது வாழ்க்கையைக் குறித்து அவனோடு பேசினார்.
தம்பி, மனித வாழ்வில் உறைவிடம் ஓர் இன்றியமையாத தேவை. இளைப்பாறவும் தலை சாய்க்கவும் ஓர் இடம் தேவை. எனது உறைவிடமாக இந்த வீட்டை வாங்கினேன். பொருட்;களை சேர்த்தேன். சில நன்கொடையாகக் கிடைத்தவை. மிகுதி எனது சம்பாத்தியமாகும் என்றார்.
அவன் அவரிடத்தில் இவையாவும் உங்களுக்கு பிரயோசனமாயிருதந்தா? என்று கேட்டான். அவர் சற்று யோசித்துப் பார்த்தார். பின்னர் அவர், பாவனைக்கு உதவாதவைகளும் இவற்றுள் இருக்கின்றன என் றார். அவன் மீண்டும் அவரிடம், அப்படியானால் ஏன் அவற்றை முன்பே எறிந்து விடவில்லை என்று கேட்டான். அவரும் அவனை நோக்கி எறிந்து விட வேண்டும் என்று எண்ணியதுண்டு, ஓரு வேளை அவை எனக்குதவக் கூடும் என்று விட்டுவிட்டேன். சிலவற்றை ஞாபகத்திற்காக வைத்தேன். ஆனாலும் அவற்றால் எந்தப் பிரயோசனமும் இல்லை. மாறாக அவை எனக்கு இடைஞ்சலாகவே இருந்தன என்றார்.
இவ்விதமாகவே மனிதனுடைய மனதில் கடந்த கால நினைவுகள் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளன. அவற்றில் துன்பத்தையும் வேதனையையும் உண்டுபண்ணுபவைகளுமுண்டு.
ஆயினும் அது ஒரு வேளை உதவும் என்று எண்ணி அதைச் சேர்த்து வைப்பவர்களுமுண்டு. அதனாலே என்ன பயன்?
பிரயோசனமற்ற பொருட்களின் பாவனை பயனற்றதும் அழிவுக்கேதுவானதும் போல பிரயோசனமற்ற நினைவுகளினால் உண்டாகும் சிந்த னைகளும் பயனற்றதும் அழிவுக்கு கொண்டு செல்கின்றவையாயுமுள்ளன.
எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவன் தாம் சிருஷ்டித்த மனிதரிடத்தில் அன்பாகவே இருக்கின்றார்.
மனிதர்களுக்கு நல்வழி காட்டி அவர்களை நித்திய அழிவுக்கு விடுத லையாக்கி அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கின்றவராயுள்ளார்.
அவர் தீர்க்கதரிசி மூலமாக மனிதர்களின் எண்ணங்களாகிய நினைவு களைக் குறித்து பேசினார்.
முந்தினவைகளை நினைக்கவேண்டாம், பூர்வமானவைகளைச் சிந்தி க்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன், என்று தமது ஜனத்திற்கு சொன்ன தேவன் வாழ்க்கையில் புதிய காரிய த்தைச் செய்கிறவராயுள்ளார்.
பிரியமான சகோதரனே சகோதரியே உன் வாழ்வில் தேவன் புதிய காரியம் செய்ய வேண்டுமானால் உன் வாழ்வில் காணப்படும் பிரயோசனமற்ற நினைவுகளையும் சிந்தனைகளையும் அகற்றிவிட்டு தேவனுடைய நினைவுகளை உன் மனதில் பதித்துக்கொள். உன் இருதயத்தில் இயேசுவே என்னை உம்முடைய பரிசுத்த நினைவுகளால் நிரப்பி, என்னை உமது பிள்ளையாய் எற்றுக்கொள்ளும் என்று கூறுவாயாக.
இயேசு சொன்னார் திருடன் (பிசாசு) திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு (தம்மை விசுவசிப்பவர்களுக்கு) ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் என்றார்.