A Tamil Christian Article - Toronto, Canada

Posted on February 21, 2017 01:13:11

உத்தம ஊழியன்

பல ராஜ்யங்களை அரசாண்ட பலம் பொருந்திய ஒரு இராஜா, சில உப ராஜ்யத்தின் விவகாரங்களை விசாரிக்கும்படியாக, சில பிரதானிகளை ஏற்படுத்தினான். அந்த பிராதானிகளுக்கு தேவையான ஆலோசகர்கள், படைப்பலம், இரதங்கள், குதிரைகள், ஆயுதங்கள் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான உணவு உடை உறைவிடம் போன் றவைகளையும் தாராளமாக கொடுத்தான். மக்களுக்கு ‘நல்ல ஆட்சி’ செய்யும்படியாக அந்த பிரதானிகளை வாழ்த்தி, சகல கனத்துடன் அவ ர்களுக்கு பட்டமளித்தான். ஆண்டுகள் கடந்து சென்றது, அந்த உப ராஜ்யத்தில் ஆட்சி நடைபெற்றது, ஆனால் ராஜா எதிர்பார்த்த நல்ல ஆட்சிக்கு அங்கு காணப்படவில்லை.  அதிகதிகமாக தரித்திரர்களும் திக்கற்றவர்களும் தேடுவார் அற்றுப் போனார்கள். சிறைப்பட்டோர் தொகை அதிகரித்தது. கட்டுண்டவர்கள் கடிந்து கொள்ளப்பட்டார்கள், ஆனால் அவர்கள் விடுதலையடையவில்லை. ஒடுக்கப்பட்டவர்கள் தங் கள் தாழ்ச்சியின் காரணத்தை அறிந்தார்கள் ஆனால் அவர்களை தூக் கிவிட யாருமில்லை. இந்த நிலையை அறிந்த ராஜா அந்த பிரதானி களை பிடித்து சிறையில் போட்டான். ஜனங்களின் குறைகளை கண்டு அவர்களை கடிந்து கொண்டு தண்டிப்பதற்காக மாத்திரம் நான் உங்களை ஏற்படுத்தவில்லை, மாறாக அவர்களின் தாழ்ந்த நிலையில் இருந்து அவர்களை மீட்டு, அவர்களை அவல நிலைக்கு கொண்டு செல்லும் காரணிகளை அழித்து விடுவதற்காகவே உங்களை ஏற்படுத்தினேன் என்று ராஜா கூறினார். அந்த பிரதானிகள் தாங்கள் விரும்பியதை செய்தார்களே தவிர அந்த ராஜாவின் கட்டளையை நிறைவேற்றத் தவறிவிட்டார்கள்.

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மலைப் பிரசங்கத்திலே இவ்வாறு கூறினார். “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.  அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”

 

இந்த வாக்கியங்களை வாசிக்கும்போது, அற்புத அடையாளங்கள் செய் வது பிதாவினுடைய சித்தம் இல்லையோ? அப்படி இயேசுவின் நாமத்தில் அற்புதம் செய்தவர்கள் செய்கின்றவர்கள் பரலோக ராஜ்யத்திற்கு செல்ல மாட்டார்களோ? என சிந்திக்கத் தூண்டலாம்.

 

கர்த்தராகிய இயேசு அற்புதங்கள் செய்கிறவராய் இந்த பூமிக்கு வந்தார்.  சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்;, அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். (மத்தேயு 15:30). இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுத ப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று அப்போஸ்தல னாகிய யோவானுடைய சுவிசேஷத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது. (யோவான் 21:25). அதுமட்டுமல்ல, என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரி யைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரி யைகளையும் செய்வான் என இயேசு கூறினார் (யோவான் 14:12). அதன் பிரகாரமாக அவருடைய அப்போஸ்தலர்களுக்கும், இந்நாள் வரைக்கும் அவர்களின் பின் வந்த தேவ ஊழியர்களுக்கும் இந்த வரங்களைத் தேவன்தாமே பகிர்ந்து கொடுத்திருக்கின்றார்.

 

இயேசு 70 சீஷர்களை சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு அனுப்ப் பினார். அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்ன லைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.  இதோ, சர்ப்ப ங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்ல மையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது என்று இயேசு கூறினார்.

தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண் டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்க ளையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார் என்று வேதத்திலே வாசிக்கின்றோம். (1 கொரிந்தியர் 12:28).  ஊழிய ங்களும் வரங்களும் தேவனால் நியமிக்கப்பட்டிருந்தால், நியாயத்தீர்ப் பின் நாளில் ஏன் இயேசுவின் நாமத்தில் அற்புதங்கள் நடத்தியவர்களில் சிலரை பார்த்து அக்கிரமச் செய்கைக்காரரே நான் உங்களை அறி யேன் என்று கூறுவேன் என இயேசு கூறியிருக்கின்றார்?

இயேசு அற்புதம் செய்கிறவராய் இந்த உலகத்திற்கு வந்த போதிலும், என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன். மேலும் தந்தையின் திட்டமானது, “அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது” என

இயேசு கூறினார். ஆம்! தொலைந்து போன ஆத்துமாக்களை தேடி அவர்களை பிதாவினிடத்தில் மறுபடியும் சேர்ப்பதற்காகவே இயேசு இந்த உலகிற்கு வந்தார்.

இயேசு இந்த உலகத்தில் தன் பணியை ஆரம்பித்த நாட்களிலே, தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தி ன்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து,  “தான் வந்த நோக்கத்தை” முன்னுரைத்த ஏசாயாவின் தீர்க்கதரிசன புத்தகத்திலி ருந்து வாக்கியத்தை வாசித்து காண்பித்தார். “கர்த்தருடைய ஆவியா னவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரச ங்கிக் கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங் குண்டவர் களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுத லையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,  கர்த்தருடைய அநு -க்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பி னார்.” இங்கு கருப்பொருளானது, ஜனங்கள் விடுதலையடையும்படி யாகவே இயேசு இப்பூமிக்கு வந்தார்.

 “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்”, “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” என்று தன்னுடைய பணியை விபரித்து பல இடங்களி லே செய்கையினாலே காண்பித்தார். அதே பணியை தம்முடைய சீஷர் களாகிய எங்களையும் செய்யும்படியாக, எங்கள் யாவரையும் உண்மை யும் உத்தமுமான ஊழியர்கள் என்று கருதி நியமித்திருக்கின்றார்.

ஊழியர் என்று கூறும் போது அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிசேஷ கர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள், உதவி ஊழியர்கள் இவர்களைக் குறித்தே பலரும் சிந்தித்துக் கொள்வார்கள். இவை குறிப்பாக ஏற்படு த்தப்பட்ட ஊழிய பொறுப்புக்கள். அதற்கென்று சிலரை தேவன் நியமித் திருக்கின்றார். இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப் பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார். (1 கொரிந்தியர் 12:11-12). ஒரு சரீரத்திலே பல அவயவங்கள் இருப்பது போல, நாங்கள் யாவரும் கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்திலே அவய வங்களாயிருக்கிறோம். எங்கள் யாவருக்கும் பொறுப்புக்கள்; உண்டு.

எனவே தேவபணியானது இயேசுவோடு இருந்த அப்போஸ்தலருக்கு மட்டுமல்ல, அந்தக் காலத்திலே அவருக்கு பின் சென்ற சீஷர்களுக்கு மட்டுமல்ல, இக்காலத்திலிருக்கும் போதகர்களுக்கு மட்டுமல்ல,  அவரை பின்பற்றுகிற யாவருக்குமுரிய கடமையாக இருக்கின்றது. தேவனுக்கென்று எழுந்து சாட்சியாக நின்ற வல்லமை நிறைந்த பல ஊழியர்களின் வாழ்க்கையை தேவன் தாமே அவர்களின் தாய் தந்தை ஊடாகவும்;, ஞாயிறு ஒய்வு நாள் பாடசாலை ஆசிரியரூடாகவும், ஜெபி க்கும் விசுவாசிகள் ஊடாகவும் ஆயத்தப்படுத்தியிருக்கின்றார்,  இன்றும் அப்படியே செய்து வருகின்றார். தேவ சித்தம் இந்த பூமியிலே நிறைவேறும்படியாக தேவன் தாமே வரங்களை பகிர்ந்து கொடுத்திருக் கின்றார். ஆளுமைகளை கொடுத்திருக்கின்றார், குடும்பங்களை கொடுத் திருக்கின்றார், நண்பர்களை கொடுத்திருக்கின்றார், செல்வங்களை கொடுத்திருக்கின்றார், ஞானத்தை கொடுத்திருக்கின்றார், அறிவை கொடுத்திருக்கின்றார். இது போன்று அநேக காரியங்களை பட்டியல் படுத்தமுடியும். இந்த ஒவ்வொரு காரியங்களும் கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபை வளர்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸதுவாலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாக சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.

இதை உணர்ந்தவர்களாய் எங்களுடைய வரங்களும் ஆசீர்வாதங்களும் எங்களைக் குறித்த பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். நாங்கள் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினால் மட்டுமே பரலோக ராஜ்யத்திற்கு செல்ல முடியும். தேவன் தந்த வரங்களும் ஆசீர்வாதங்களும் அவர் எங்களுக்கு தந்த ஆத்துமாக்களில் எதுவும் விழுந்துவிட விடாமல் இருக்க உதவவும், கடைசிநாளில் அவைகள் தேவனுக்கு முன்பாக எழுந்திருக்க வேண்டும் என்பதே, எங்கள் நோக்கமுமாயிருக்க வேண்டும். அப்படி பிதாவினுடைய சித்தம் செய்யாமல், எப்படிப்பட்ட பெரிதான கிரியைகளை நடப்பித்தாலும் கடைசி நாளிலே கர்த்தர் அக்கிரம செய்கைக்காரரே நான் உங்களை அறியேன் என்று கூறுவேன் என சொல்லியிருக்கின்றார். 

நாங்கள் தேவ சித்தத்தை நிறைவேற்றி அவரை தரிசிக்கும் நாளிலே “உண்மையும் உத்தமமுமான ஊழியர்களே”, என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளு ங்கள். என கூறும் நாளை எண்ணி பிதாவின் சித்தத்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றுங்கள்.

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே உங்களை வழிநடத்துவாராக! ஆமேன்.