பூமிக்கு உப்பாயிருங்கள்

Posted on April 13, 2016 01:56:45

INTO A NEW DAY - DAILY DEVOTION -  INNER MAN, A TAMIL CHRISTIAN FREE MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA.     

வாசகம்: மத்தேயு 5:13, பிலிப்பியர் 2:4, 1 பேதுரு 3:17

உப்பு தன் உருவை இழந்து எப்படி மற்றைய பொருட்களை சாரமேற்றுகின்றதோ, நாமும் எம்முடைய வாழ்வில் நான் என்னும் சுயரூபத்தை இழந்து, சுயநலம் அற்றவர்களாய் தேவனுடைய குணாதிசயங்களை எங்கள் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.

பூமிக்கு உப்பாக இருப்பதென்பது எங்களுக்கு பதவியுயர்வு கிடைத்ததென்று பெருமையடைந்து எப்போதும் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதென்பது பொருளல்ல.

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்க ளானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். என்று இயேசு கூறியிருக்கிறார். எனவே நிந்தனைகள் மத்தியிலும் நாங்கள் எங்கள் சாரத்தை இழந்து போகாதபடிக்கு தேவனுடைய சித்தத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்றவேண்டும். எங்கள் நற்கிரியைகளை மற்ற மனுஷர்கள் கண்டு பரம பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தும்படியாக சாட்சி யுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்.