ஒரு உன்னதமான அழைப்பு!

Posted on April 14, 2016 01:18:46

INTO A NEW DAY - INNER MAN CHRISTIAN MAGAZINE IN TAMIL - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH

வாசகம்: மத்தேயு11:28

வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

பிரியமானவர்களே, இந்த உலகத்திலே மனுஷனுடைய வாழ்க்கையிலே ஆவி ஆத்துமாக்குரிய சந்தோஷங்கள் குறைவடைந்தே போகின்றது. இருளின் அதிகாரம் கூடுவதால் மனிதன் துன்பத்தோடே படுத்து, துன்பத்தோடே விழிக்கிறான்.

இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ஒரு உன்னதமான அழைப்பு உண்டாயிருக்கின்றது. இந்த அழைப்பானது வானத்தையும் பூமியையும் பூமியின் கடையாந்தரங்களையும் சிருஷ்டித்த பரிசுத்த தேவனின் குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவிடம் இருந்தே வருகின்றது. தம்முடைய குமாரனைக் கொண்டே, சகலவற்றையும் தேவன் சிருஷ்டித்து இருக்கின்றார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டால், ஆவி ஆத்துமா சரீரம் விடுதலை அடைந்து, ஆத்மீகத்திலே ஒரு தாகம் ஏற்படுகின்றது. சமாதானமும் ஆசீர்வாதமும் உனக்குள்ளே பெருகுகிறது.