நன்றியறிதலுள்ளவர்களாக...

Posted on May 01, 2016 01:20:52

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA   

வாசகம்: சங்கீதம் 103:1-13,  1 நாளாகமம்16:34

செங்கடலை தேவன் பிளந்து இஸ்ரவேலருக்கு இரட்சிப்பைப் கொடுத்த போது, அவர்கள் கெம்பீரித்து பாடினார்கள். நாளடைவில் அதைவிட ஒரு சின்ன பிரச்சனை வந்த போது, தேவன் செய்த நன்மையை மறந்து, முறுமுறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நாமும் அநேக நன்மைகளை தேவனிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றோம். பெற்றுக் கொள்ளும்வரை அதிக நேரம் வேண்டுதலில் இருப்போம், ஆனால் அந்த வேண்டுதல் கிடைத்தவுடன், தேவனை துதிப்பதில் அதிக நேரம் செலவிடுவதில்லை. நாளடைவில் வேறொரு இக்கட்டில் மாட்டிக் கொள்ளும் போது, தேவன் செய்த நன்மையையும் தேவன் இதையும் செய்ய வல்லவர் என்பதையும் மறந்து விடுகின்றோம்.

இக்கட்டு வரும் போது, அவர் செய்த நன்மைகளை சொல்லித் துதியுங்கள். கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. அவர் செய்த உபகாரங்களை ஒருநாளும் மறவாதே, எங்கள் தப்பிதங்களை எங்களுக்கு மன்னித்து, படு குழியில் இருந்து விடுவித்து, தம் இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்.