நீ என்னுடையவன்

Posted on April 12, 2016 18:28:36

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA         

வாசகம்: ஏசாயா 43:1

“இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பெயர் சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்”.

நம்மை சிருஷ்டித்தவர், எம்மைப் பார்த்து என்ன சொல்கின்றார்? நீ என்னுடையவன்(ள்), மகனே, மகளே அவர் உன்னை என்னுடைய வன்(ள்) என்று கூறுவதை எப்போதாவது சிந்தித்ததுண்டா? ஆபிராம் என்பவனை ஆபிரகாம் என்று பெயர் சொல்லி அழைத்தார். சாராய் என்பவளை சாராள் என்று பெயர் சொல்லி அழைத்தார். யாக்கோபு என்பனை இஸ்ரவேல் என்று பெயர் சொல்லி அழைத்தார்.

இப்படியாக தம்முடையவர்களை பெயர் சொல்லி அழைத்த தேவன், உன்னையும் என்னுடையவன்(ள்) என்று அழைக்கும் சத்தத்தைக்கேளாயோ? ஆம், நாம் இன்று விசுவாசிப்போம், அறிக்கையிடுவோம், நான் கர்த்தருடையவன், அவரும் என்னுடையவர். அவரே என் கேடகமும், மகா பெலனுமானவர். அக்கினியூடாக நடந்தாலும், ஆழி யின் தண்ணீரைக் கடந்தாலும், சோதனை மிக பெருகினாலும் அற்புத மான கர்த்தர் என்னோடிருப்பார். நான் அவருடையவன்(ள்)! ஆமேன்!