கனிதரும் காலம் இது

Posted on April 12, 2016 18:27:01

INTO A NEW DAY - INNER MAN  TAMIL MAGAZINE - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH ONTARIO, CANADA  

வாசகம்: யோவான் 16:33, 15: 5, மத 7:17 கலாத்தியர் 5:22

நான் நல்ல மனுஷனாக மாற முடிவெடுத்து வாழ ஆயத்தம் செய்யும் போது என்னை குழப்பும்படியாக, என்னுடைய அயல் வாசி இப்படியாக தீங்கு செய்து என் பழைய மனு~னை எழுப்பி விட்டான் என்று சொல்லுகிறவர்கள் அநேகர் உண்டு.

அப்படியாக ஒரு மனிதன் எங்களை குழப்ப முயலும் போது, அது எங்கள் நல்ல கனிகளை வெளிக் காட்ட ஒரு நல்ல சந்தர்ப்பம். ஒருவர் எங்களை கோபமூட்டும் போது, அம் மனிதனை திருப்;திப் படுத்த  நாங்கள் கோபம் கொண்டு தாறுமாறான வார்த்தைகளை பேசலாம் அல்லது அந்த சந்தர்ப்பம் எங்கள் சாந்த குணத்தை வெளி க்கொண்டுவரும் ஒரு நல்ல சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ளலாம்.

உலகத்தில் நடக்கும் சம்பவங்கள் எங்களுக்கு சாதகமாகவோ அல்லது எங்கள் கட்டுப்பாட்டிலோ இல்லை, ஆனால் தேவ ஆவியின் வழி நடத்தலால் நாங்கள் எங்களை தேவனுக்கென்று கனி கொடுக்கிற வர்களாய் மாற்ற முடியும். சந்தர்ப்பம் என்னை கெட்டவனாக மாற்றி விட்டது என்று சொல்லாமல், எல்லா சூழ்நிலையிலும் தேவனுக் கென்று கனிகொடுப்போம்!