கைவிடப்படுவதில்லை!

Posted on April 15, 2016 00:54:49

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, TORONTO, ONTARIO, CANADA     

வாசகம்: ஏசாயா 49:14-16,  உபாகமம் 31:6 எண்ணாகமம் 23:19

தேவன் எங்கே? ஒருவேளை என்னை மறந்தாரோ, என்னை கைவிட்டுவிட்டாரோ என்று சிந்திக்கத் தோன்றலாம்.

தாயின் அன்பைக் அனுபவித்தவர்கள் உண்டு, ஒரு வேளை அப்படியான சிலாக்கியம் சிலருக்கு கிடைக்காவிட்டால், தாயின் அன்பை குறித்து மற்றவர்களின் அனுபவத்தைக் கேட்டிருப்பீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்! எங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் ஒரு நல்ல தாயானவள் எப்போதும் எந்த வயதிலும் தன் பிள்ளையை குறித்து அன்புள்ளவளாகவே இருப்பாள்! அப்படி ஒரு வேளை தாய் தன் பாலகனை மறந்தாலும் நான் உன்னை மறக்கமாட்டேன் என்று ஜீவனுள்ள தேவன் கூறியிருக்கின்றார்.

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகயில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது என்று வாக்குமாறத தேவன் தன்னுடைய ஜனங்களுக்கு கூறியிருக்கிறார்.  அவர் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டார்!