ஜெபத்தின் மேன்மை

Posted on April 16, 2016 02:05:06

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH - SCARBOROUGH, ONTARIO, CANADA

வாசகம்: சங்கீதம் 62:8 

“ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.”

எங்கள் ஆண்டவரும், மீட்பருமாகிய பரிசுத்த தேவகுமாரன் இயேசு கற்பித்த ஜெபமே மேன்மையானது. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படி அதைச் செய்வேன் என்று சொல்லியிருக்கிறாரே.

 அன்புக்குரியவர்களே, தேவனுடைய மேலான கற்பனைகளின் வழி நடந்து அவருடைய வார்த்தைகளின்படி நடக்கிறவர்களுக்கு அவர் பதில் தருகிறவரும், ஜெபங்களை கேட்கிறவருமாகிய தேவன்.

 அனுதினமும் உலகத்தின் உபத்திரவங்களால் சூழப்பட்டிருக்கும் நாம், எங்கள் சஞ்சலத்தை கர்த்தருடைய சமூகத்திலே தெரிவிப்போம். கர்த்தர் எனக்கு நன்மை செய்ய காத்திருக்கிறார் என்பதை விசுவாசிப்போம். அவருடைய கிருபையின் மேல் தங்கியிருக்கிற அனைவருக்கும் அவர் சகாயர். அதிகாலையில் ஜெபிப்போம். ஜெயம் பெறுவோம்.