என் வாழ்வின் ஆனந்தம்

Posted on May 01, 2016 01:22:09

INTO A NEW DAY - DAILY DEVOTION - GRACE TABERNACLE APOSTOLIC CHURCH, SCARBOROUGH, ONTARIO, CANADA    

வாசகம்: ரோமர் 1:17

“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது”

எனக்காக சிலுவையை சுமந்து, பலியாக உம்மை ஒப்புக்கொடுத்து, உமது இரத்தத்தை சிந்தினீரே. என் அக்கிரமங்கள், என் பாடுகள், என் நோய்கள், என் துக்கங்கள் யாவற்றையும் நீர் சுமந்தீரே. உன்னதரே இயேசுவே, நீர் இரக்கமுள்ளவர், மனதுருக்கமுடையவர், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்.

நான் என்ன சொல்வேன் என் இயேசுவே, உமக்கு மறைவானது ஒன்றுமில்லை என் உள்ளந்திரியங்களையும், என்  வாழ்க்கையையும் நீர் அறிவீர். வேதனை உண்டாக்கிய என் வழிகளை எனக்கு தயவாய் மன்னித்தருள்வீராக. உம் தூய அன்பும், தூய இரத்தமும், தூய கிருபையும் என்னைப் பரிசுத்தமாக்கி உம்முடையவனாக்கும். உம்மேல் வைத்த விசுவாசத்தினாலே நீதிமானானேன்.

 ஆம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போம், அவரை எங்கள் வாழ்க்கையில் பேரானந்தமாக்கிக் கொள்வோம்.