Posted on March 19, 2016 15:13:31
Freedom - A Christian Article in Tamil, Toronto, Ontario, Canada
விடுதலையானது சிறையிருப்பை எதிர் நோக்குபவர்களும் சிறையிருப்பில் உள்ளவர்களும் ஆவலோடு எதிர்நோக்கும் ஓன்று. சிறையிருப்பி லிருந்து விடுதலையுண்டு என்று அறியாதவன் துன்பத்தோடு விடுதலையின்றி வாழ்கின்றான். நிலைக்கண்ணாடியில் ஒருவன் தன்னைப் பார்க்கும் போது தன் முகத்தோற்றத்தை கண்டு கொள்கின்றான். ஒருவன் தன்னைத்தான் அறிந்து கொள்வதும் தன் நிலையை விளங்கிக் கொள்வதும் மிகவும் நல்லது. அது அவசியமானதும் கூட. சிறையிருப் பானது எப்போது எப்படி ஒருவனின் வாழ்க்கையில் வருகின்றது? அவன் சிறையிருப்புக்கு ஏதுவான ஒரு செயலை செய்வதனால் அல்லவா! ஆயினும் மனிதர்கள் அத்தகைய செயல்களை செய்யும் போது சிறையிருப்பைக் குறித்து நினைப்பதில்லை. தங்களது விருப்பத்தை நிறை வேற்றுவதே அவர்களின் நோக்கமாய் காணப்படுகின்றது. மனிதர்கள் தங்கள் சிறையிருப்பை உணராது துன்பத்தோடு வாழ்கின் றார்கள். இன்னும் பலர் விடுதலையுண்டு என்று அறியாதிருக்கிறார்கள்.
பரிசுத்த வேதாகமத்திலே இயேசு கிறிஸ்து கூறிய ஒரு உவமையை பார்ப்போம்.
லூக்கா 15:11-24
“பின்னும் அவர் (இயேசு) சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக் கொடுத்தான்.
சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டா யிற்று.
அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய் தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி, எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்.
அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ் செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதம hகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.
அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழு த்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான், காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான்.”
பிரியமான சகோதரனே, சகோதரியே!
ஒருவன் தனது பாவ வழிகளினாலும் பாவ குணாதிசயங்களினாலும் தன் வாழ்வைக் கெடுத்து சிறையிருப்பில் வாழ்கின்றான். ஒருவன் அதை உணர்ந்து தேவனிடத்தில் வந்தால் அவற்றிலிருந்து விடுதலை தந்து அன்போடு அணைத்து முத்தம் செய்யும் தகப்பனாக அவனை சிருஷ்டித்த தேவன் அழைக்;கிறார்.
இன்று உனது தேவை என்ன? இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை வேண்டும், உனது சிறையிருப்பிலிருந்து விடுதலை வேண்டும் என்று விரும்பினால் பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து எனது சிறையிருப்பிலிருந்து விடுதலை தாரும் என்று கூறுவாயாக.