வசந்தம் வர வேண்டும்

Posted on March 03, 2016 03:51:22

வசந்தம் என்று சொல்லும் போது அது மனதிற்கு இதமாகவே உள்ளது. அதன் காரணம் என்னவென்றால், அதன் கருத்தை மனம் நன்றாகவே அறிந்திருப்பதாகும். வாழ்வில் வசந்தம் வேண்டும் என்று விரும்பாதவர்கள் யார்? அது எனக்கு வேண்டும்; என் குடும்பத்திற்கு வேண்டும்; என் உறவினருக்கும் வேண்டும் என கூறுபவர்கள் அநேகர்.

வாழ்க்கையில் வசந்தம் மனரம்மியமானது. அது வாழ்வில் மகிழ்ச்சி, எல்லாவற்றிலும் சந்தோஷம், எப்போதும் நிம்மதி, அமைதியான தூக்கம், நம்பிக்கையோடு நித்திரையிலிருந்து விழித்தெழுதல், எப்போதும் எல்லாவற்றிலும் திடமாயிருத்தல் என இன்னும் பல நன்மைகளை கொண்டுள்ளது.

வசந்தம் வாழ்க்கையில் வருமா? அது எப்போது வரும்?

தரிசு நிலங்களையும் காடாயிருந்த நிலங்களையும் வளமான தோட்டமாகவும் பயன் தரும் வயல்களாகவும் மாற்றியவர்கள் உழவர்களே. வசந்தமின்றி தரிசு நிலம் போலுள்ள வாழ்வானாலும் சரி அல்லது காடு போன்று சவால்களும் பயங்களும் நிறைந்த வாழ்வானா லும் சரி, அதை வளமான தோட்டமாகவும் பயன் தரும் வயல்களா கவும் மாற்ற முடியும்.

பரிசுத்த வேதாகமத்திலே இது பற்றியுள்ள வார்த்தைகளை பார்ப்போம்.

சங்கீதம் 84:4-6 “(தேவனே) உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிரு ப்பார்கள். உம்மிலே பெலன்கொள்ளுகிற மனு~னும், தங்கள் இருதயங் களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவா ன்கள். அழுகையின் பள்ளத்தாக்கை உருவநடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்.”

எம்மை சிருஷ்டித்த மெய்த் தேவனில் நம்பிக்கையாயிருந்து, அவரின் அருளைப்பெற்று அவரில் பெலன்கொள்ளுகின்ற மனுஷர் பாக்கியவா ன்கள். ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை அழுகையின் பள்ளத்தாக் காயிருந்தாலென்ன, தரிசு நிலம் போல் வெறுமையாயிருந்தாலென்ன அல்லது காடு போன்று பயங்கள் நிறைந்ததாய் இருந்தாலென்ன, அவர்கள் நாணி ஒதுங்காமலும் பயந்து விலகாமலும் அதை உருவ நடந்து அதை வளமான தோட்டம் போலாக்கி கொள்கின்றார்கள்.

தேவனின் அருளைப் பெற்ற மனிதனை குறித்து தேவன் உரைத்த வாக்குத்தத்தமானது:

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார், நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போல வும் இருப்பாய் என்று ஏசாயா 58:11 இல் கூறப்பட்டுள்ளது.

மேலும் சங்கீதம் 1:3 இல:

“அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.”

அவன் வாழ்க்கை வசந்தமுடையதாயிருக்கும். செழிப்பான வளமான தோட்டமாயிருப்பான் என்று கூறப்பட்டுள்ளது.

தேவனை தனது நம்பிக்கையாய் கொண்டிருந்த இராஜவாகிய தாவீது தேவனை நோக்கி ஜெபிக்கும்  போது “எங்களுக்கு நன்மை காண்பிப்ப வன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர், கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். சமாதானத் தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன், கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.” என்று ஜெபித்தார்.

பிரியமான சகோதரனே, சகோதரியே!

 “கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணு ம்படி, அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பா ர்கள்.” அவர்களை தேவன் ஆசீர்வதித்து நடத்துகிறார்.

 “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப் பேன், என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன், ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனு க்குக் காண்பிப்பேன்.” என்று தேவன் வாக்களித்துள்ளார்.

 இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும் என்று விரும்பினால், இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து எனக்கு சாபத்திலிருந்து விடுதலை தாரும் என்று கூறுவாயாக.