Posted on March 13, 2016 03:13:32
இது எனது உரிமை! எங்கள் உரிமை! மனிதர்களின் உரிமை! தனி மனித சுதந்திரம்!
இவற்றை குறித்து மனிதர்கள் பேசுவதுண்டு, போராடுவதுமுண்டு. இதற்காக தங்கள் வாழ்க்கையை செலவு செய்தவர்களுமுண்டு. உண்மையிலேயே இவைகள் பேணிக்காக்கப்பட வேண்டியவையே. பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், வாழும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, தொழில் செய்யும் உரிமை, திருமணம் செய்து கொள்ளும் உரிமை இப்படியே பல காரியங்களைக் குறித்து பேசலாம். சுதந்திரமானது மனித இனத்தின் அடிப்படை இயல்பு, அவற்றில் அடையாளம் காணப்பட்டு, நாட்டின் அல்லது சர்வதேச சட்டங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை மனிதனின் உரிமைகளாய் அறியப்பட்டன என்றால் அது மிகையாகாது.
மனித உரிமைகள் என்று பேசப்படும் பல உரிமைகள் நாட்டுக்கு நாடு நடைமுறையில் வேறுபடுகின்றது. உதாரணமாக, பொது இடங்களில் இருக்கும் போது கணவன் மனைவி ஓருவரை ஒருவர் முத்தம் செய்வது சில நாடுகளில் தண்டனைக்குரிய குற்றம் ஆனால் பல நாடுகளில் அது மனிதர்களின் உரிமையாயுள்ளது. இதில் யார் சரி யார் பிழை என்பது ஓர் நீண்ட விவாதத்தை ஏற்படுத்தும். இதை விவாதிப்பவர்களும் மனிதர்களே. ஆயினும் இங்கு ஓர் அடிப்படை உண்மையை நாம் உணர்ந்து கொள்ள முடியும். அது என்னவென்றால் மனித சுதந்தரமானது காட்டாறு வெள்ளமாக முடியாது. அதற்கு அணை தேவை. இது பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள், சமூக அடிப்படையில் அவர்களின் பண்பாடாகவும் பாரம்பரியமாகவும் இவ்வணைகளை கட்டியெழுப்பி பாதுகாத்து வந்துள்ளனர்;. ஆயினும் இவற்றை உடைத்து போடுபவர்களும் எல்லை மீறுகின்றவர்களும் இருக்கவே செய்கின்றனர். இவ்விதமாய் கட்டுக்கோப்புகள் உடைக்கப்பட்டதனால் நன்மைகளும் உண்டானது தீமைகளும் உண்டானது. பலரின் தனி மனித வாழ்வு வளமடைந்ததுண்டு இன்னும் பலரின் தனி மனித வாழ்வு சீரழிந்ததுமுண்டு. எனவே, தனி மனித சுதந்திரமும் மனிதர்களின் உரிமையும் மனித வாழ்வில் எப்போதும் வளமும் நன்மையுமாயிருப்பதற்கு இன்றியமையாத அம்சம் என்ன? ஒரு பொருளை வாங்கும் முன் அதன் உண்மைதன்மையை அறிய விரும்புகின்றோம். கலப்படம் செய்யப்பட்டுள்ள உணவை நாம் வாங்குவதில்லை. அவை ஆரோக்கியக் கேட்டை உண்டுபண்ணும். அப்படியே தனி மனித சுதந்திரமும் மனிதர்களின் உரிமையும் மனித வாழ்வில் எப்போதும் வளமும் நன்மையுமாயிருப்பதற்கு அவை மாசு, கலப்படம் அற்றதாயிருக்க வேண்டும். ஆம் பரிசுத்தம் வேண்டும். அது மனித வாழ்வில் வேண்டும். அப்போது மனிதனின் எண்ணங்களும் சிந்தனைகளும் சுத்தமாயிருக்கும்.
பரிசுத்தமாக வழியுண்டா? அது எது?
பரிசுத்தத்தை எப்படி அளவிட முடியும்? அதின் அளவுகோலை யார் வைத்துள்ளார்? பரிசுத்த வேதாகமத்தில் “நீங்கள் முன்னமே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தரா யிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.” (பேதுரு 1:14,15) என்று எழுதியுள்ளது. ஆகவே பரிசுத்தமாக வழியுண்டு. மேலும் “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. அன்றியும் பட்சபாதமில்லால் அவனவனுடைய கிரியையின்படி நியாயந் தீர்க்கிற வரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டு வருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்து கொள்ளுங்கள்.” (பேதுரு 1:16,17) என்று எழுதியுள்ளது. தேவன் தம்மைப்போல நாமும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார். இதுவே அளவுகோல். இதை அளப்பவரும் தேவனே. மனிதர்களை நியாயம் தீர்ப்பவருமவரே.
பரிசுத்தமாகும் வழிதான் என்ன?
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசி க்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ள வனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமா யிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக் கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்கு ள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.” (யோவன் 3:16-21)
இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கின்றார். பாவ வழிகளி லிருந்து விடுதலை வேண்டுமானால் இயேசுவே எனக்கு இரங்கும் என்று இன்றே கூப்பிடு, நிச்சயம் அவர் விடுதலை தருவார்.