Posted on March 17, 2016 01:57:50
நீதிக்கு ஓர் தனித்துவ உயர்நிலையை மனிதர்கள் கொடுக்கின்றார்கள். நீதி என்னும் சொல்லானது பல பிரிவுகளாய், பாவனையிலுள்ளதும் பேசப்படுகின்றதுமான ஓரு சொல். நீதி மன்றங்கள் நீதியை நிலைநிறுத்த தொடர்ந்து பிரயாசப்படுகின்றன. இங்கு நீதியானது அந்நாட்டின் சட்டங்களுக்கமையவே நடைமுறைப் படுத்தப்படுகின்றன. தவறு செய்தவர்களுக்கு தண்டனையும் தவறிழைக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டையும் நீதிமன்றங்கள் பெற்றுக் கொடுக்கின்றன. சிறப்பாக இயங்கும் நீதிமன்றங்கள் சமூக வாழ்க்கையில் மிகப் பெரிய பங்கை வகிக்கின்றன.
நீதியை பேசுகின்றோம் என்று சொல்லும் மனிதர்கள் ஓரே காரியத்தில் வெவ்வேறான கருத்துக்களை உடையவர்களாக உள்ளனர். உச்ச நீதி மன்றங்களிலும் கூட ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகள் பங்கெடுக்கும் சில வழக்குகளில் எல்லா நீதிபதிகளின் கருத்தும் ஒத்ததாக இருப்பதில்லை.
எனவே நீதி என்னும் பண்பின் உறைவிடம் ஏது? அதை எங்கே கண்டடைய முடியும்?
உலக நடப்புக்களைக்குறித்து பேசும் போது நீதி நடப்பிக்கப்பட வேண்டும் என்று மனிதர்கள் விரும்புகின்றார்கள். அதற்கேற்ப தங்கள் கருத்துக்களையும் கூறுகின்றார்கள். நல்லது, நீதி நடப்பிக்கப்பட வேண்டும் என்ற விருப்பமானது நல் வாழ்வுக்கு உதவுகின்றது. இவற்றுக்கு மேலாக, மனிதர்கள் தங்களது தனி வாழ்வில் நீதியுண்டோ என்று பார்ப்பார்களானால் அதின் பதில் என்னவாயிருக்கும்.
நீதி என்னும் பண்பை எங்கே பெற்றுக்கொள்ள முடியும்? அதன் உறைவிடம் எங்கேயுள்ளது?
வானம் பூமி யாவும் படைத்த தேவன் பரிசுத்தராயுள்ளார். அவரே நீதிபரராயுள்ளார். அவரே, அவர் ஓருவரே பாவியை நீதிமானாக்கின்றவர்.
ஓருவன் பாவியை நீதிமானாக்குகின்ற தேவனிடத்தில் விசுவாசம் வைக்கும் போது, தேவன் அவனுக்கு அதை நீதியாய் ஏற்றுக்கொள்கின்றார். எப்படியெனில், தேவன் ஓருவரே பாவியை நீதிமானாக்கின்றவர். ஆகையால் நீதிமானாக விரும்பும் ஓருவன் அவரிடத்தில் வரும் போது அது சரியான செயலாயுள்ளது. அந்த மனிதனை தேவன் ஏற்றுக் கொண்டு அவன் பாவங்களை மன்னித்து அவனை நீதிமானாக்குகின்றார்.
இதற்காகவே இயேசு இவ்வுலகிற்கு வந்து சிலுவையிலே மனிதர்களின் பாவங்களுக்காக மரித்தார். அவர் பாவம் செய்யவில்லை. அவர் பாவத்தைப்போக்கும் பலியாக வந்தார். அவர் மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்கா கவே அவரை அனுப்பினார்.
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவ னாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.” (யோவான் 3:16-19)
என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது.
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”
இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களி லிருந்து விடுதலை வேண்டும் என்று விரும்பினால், பாவியை நீதிமானா க்கின்ற இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து எனக்கு பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை தாரும் என்று கூறுவாயாக.