INNERMAN MONTHLY FREE TAMIL MAGAZINE

Posted on March 22, 2016 13:16:39

INNERMAN BOOK - MONTHLY FREE MAGAZINE - TORONTO, ONTARIO, CANADA 

உள்ளான மனிதன் - அனுதின தியானக் குறிப்புக்கள்

சித்திரை 2016 ல் இருந்து, “புதிய நாளுக்குள்”  என்ற தலைப்பில், அனுதின தியானக் குறிப்புக்களை உங்களுக்கு தருகின்றோம்.

சீரான நோக்கத்துடன் இந்த தியான குறிப்புக்களை வாசியுங்கள். எங்கள் எழுத்துக்கள் அல்ல, தரப்பட்ட கதைகள் அல்ல, தேவனுடைய வார்த்தையே ஜீவனுள்ளது. 

இந்த தியானக் குறிப்புக்களை வேதத்தில் குறிப்பிடப்பட்ட வசனங் களை மையமாக கொண்டு, சுருக்கமான கட்டுரைகளாக, இலகு மொழி நடையில் உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். “என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கின்றான்” என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். அவரிலே நிலைத்திருந்து கனி கொடுக்கும் ஜீவியத்தில் வளர,  பரிசுத்த வேதாகமத்தை வாஞ்சையோடு வாசிக்க, கருத்தோடு தினமும் ஜெபிக்க, இந்தக் குறிப்புக்கள் உங்களை ஊக்குவிக்கும் என விசுவாசிக்கிறோம். இரட்சிப்பு கர்த்தரிடத்திலிருந்து வரும்.

கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துதாமே உங்களை வழி நடத்துவாராக!