INNER MAN BOOK

Posted on March 04, 2016 22:46:24

“உள்ளான மனிதன்” என்னும் மாதாந்த சஞ்சிகையூடாக “ஆன்மீக மீட்பின்” செய்தியை உங்களுக்கு அறிவிக்க கிடைத்த சந்தர்ப்பத்திற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.

முடிவில்லா வாழ்வைக் கொடுக்கும் வசனங்கள் அடங்கியதும், யாவரும் வாசிக்க கூடிய, அதி சிறந்த, ஒரே புத்தகமாக “பரிசுத்த வேதாகமம்” விளங்குகின்றது.  அதற்கு மாற்றீடாக மற்ற எந்த புத்தகத்தையோ, சஞ்சிகையையோ வாசிக்க முடியாது. அந்த சத்திய வேதத்தை ஒரு கதைப் புத்தகம் போல படித்து பயனடையமுடியாது. ஊக்கமான ஜெபத்தோடு, ஆர்வமாக அதைப் படித்தால், தூய ஆவியானவர் தாமே அவ்வசனங்களை புரிந்து கொள்ள உங்களுக்குத் துணைசெய்வார்.

இந்த சஞ்சிகையை, வேதத்தில் குறிப்பிடப்பட்ட வசனங்களை மையமாக கொண்டு, சுருக்கமான கட்டுரைகளாக, இலகு மொழி நடையில் உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். பருவத்தில் பயிர் செய்கிறவர்கள் அதன் பலனை ஏற்ற காலத்தில் அறுக்கின்றார்கள். அதேபோல வாழ்வளிக்கும் ஒரே கடவுளை கண்டடையத் தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். பரிசுத்த வேதாகமத்தை கருத்துடன் வாசியுங்கள், ஊக்கமாக தினமும் ஜெபம் செய்யுங்கள், தேவ வசனத்திற்கு கீழ்படியுங்கள், தேவனாலும், தேவனுடைய ஜீவ வசனத்தினாலும் ஆன்மீக விடுதலையை பெற்றுக்கொள்ளுங்கள். தேவ ஆவியானவர்தாமே உங்களை எல்லா சத்தியத்திலும் வழி நடத்துவார்.

கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துதாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

 

https://gtachurchnet.ca/im