யார் இவர்? எதற்காக வந்துள்ளார்?

Posted on February 21, 2016 03:46:07

சிறு குழந்தைகள் புதியவர் ஓருவரை வீட்டில் கண்டால் தகப்பனிடத்திலோ அல்லது தாயினிடத்திலோ ‘இவர் யார்’ என்று கேட்பதுண்டு. அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவர்களை இப்படி கேட்க தூண்டுகின்றது. இளம் பிள்ளைகளும் முதல் முறையாக உறவினரையோ அல்லது விருந்தினரையோ தங்கள் வீட்டில் வரக் கண்டால் பெற்றோரிடம் யார் இவர்(கள்) என்று கேட்பார்கள். பெற்றோர்  பிள்ளைகளின் நண்பர்கள் யாரையாவது முதல் முறையாக தங்கள் வீட்டில் வர காணும் போது யார் இவர்(கள்) என்று பிள்ளைகளிடம் கேட்பார்கள். இக்கேள்வியைத் தொடர்ந்து வரும் அவர்களின் அடுத்த கேள்வி எதற்காக இங்கு வந்துள்ளார்?


ஓரு போதகர் பின்வருமாறு எழுதியுள்ளார். “ஓரு விதவை பெண் தனது வீட்டில் வசித்து வந்தாள். அவளுக்கு போதிய வருமானமில்லை. மிகவும் க~;டமான நிலையில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு உதவி செய்ய உறவினரோ நண்பர்களோ இல்லை. தனது சிறு பிள்ளைகளோடு தனியாக வாழ்ந்து வந்தாள். இவள் தேவாலயம் செல்வதுண்டு. ஓரு நாள் இந்த பெண் மிகவும் க~;டப்படுவதை அறிந்த தேவாலய போதகர் அவளுக்கு பண உதவி செய்வதற்கு பணத்தை எடுத்துக்கொண்டு அவள் வீட்டுக்கு சென்றார். அவள் வீட்டுக் கதவு பூட்டியிருந்தது. அவர் கதவைத்தட்டினார்; பதிலில்லை. மீண்டும் கதவைத்தட்டினார் பதிலில்லை. மேலும் சில தடவைகள் அவர் கதவைத்தட்டினார் பதிலில்லை. அவள் வெளியில் எங்கோ சென்றிருக்க வேண்டும் என்று எண்ணியபடி அவர் தேவாலயம் திரும்பினார். வேறொரு நாள் அவளை தேவாலயத்தில் அவர் கண்ட போது தான் வீட்டிற்கு வந்ததையும் கதவு பூட்டியிருந்ததையும் தான் கதவைத் தட்டியதையும் சொன்னார். அவளோ சிந்தித்துக்கொண்டே தான் வெளியில் எங்கும் செல்லவில்லை என்றும் வீட்டில் இருந்ததாயும் சொன்னாள். பின்னர் அந்த நாளை ஞாபகப்படுத்திக் கொண்டு போதகரிடம் என்னை மன்னித்துவிடுங்கள். கதவு தட்டிய சத்தம் கேட்டது. வடகைப் பணத்திற்காக வீட்டு உரிமையாளர் தட்டுகின்றார் என்று எண்ணி  கதவைத் திறக்கவில்லை என்றாள்.”


யார் இவர்? எதற்காக வந்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ளாவிட்டால் அது இழப்பாகவே முடியும். நன்மை செய்யும்படி வருபவர்களுமுண்டு பொல்லாப்பு செய்ய வருபவர்களுமுண்டு. அவர்கள் அடையாளம் காணப்படாவிட்டால் அது இழப்பாகவே இருக்கும்.
இயேசு சொன்னார் (யோவான் 10)


“திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டா யிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்த மல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான், அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைக ளைச் சிதறடிக்கும்.”.  

ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக் கொண்டிருந்தான். ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான். இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள், அப்பொழுது அவன் இயேசுவே எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ மிகவும் அதிகமாய் அவரைக் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார். அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான், ஜனங்களெ ல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள். (லூக்கா 18)

உங்கள் வாழ்க்கையில் உங்களை கொல்லவும் அழிக்கவும் தக்கதான காரியங்கள் பழக்கங்கள் எவை? ஆவை, திருடனான பிசாசிற்கே உரியவை. ஆண்டவராகிய இயேசுவோ அவை எல்லாவற்றிலும் இருந்து உங்களை விடுவித்து வாழ்வு தருகிறவராயுள்ளார். விடுதலை வேண்டும் என்று விரும்பினால் இயேசுவே எனக்கு இரங்கும் என்று சொல்லுங்கள். அவர் தம்மை நோக்கி கூப்பிடுபவர்களுக்கு பதிலளிப்பவர்.

RECENT BLOGS