நிம்மதியைத் தேடும் மனிதர்கள்!

Posted on February 21, 2016 03:38:20

ஒரு சமயத்திலே, சகல ஆயக்காரரும் பாவிகளும் இயேசுவின் வசன ங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.

ஆயக்காரர் என்னும் பிரிவினர் இஸ்ரவேலராக இருந்தபோதும் உரோம ருக்கு வரி சேகரித்து வந்ததால் இஸ்ரவேலர் மத்தியிலே விரும்பப்படாதவர்களாகவும், துரோகிகளாகவும் எண்ணப்பட்டார்கள். அத்து டன் ஆயக்காரர் சக குடிமக்களிடம் வசூல் செய்யும் பணத்தின் மூலம் தங்கள் ஐசுவரியத்தை அநியாயமாக பெருக்கி வந்தார்கள் என்பது பொதுவான அபிப்பிராயம்.

அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இயேசு பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். பரிசேயர்;, வேதபாரகர் எனப்பட்ட யூத மதப்பிரிவினர் வேத பிரமாணங்களை நன்றாக அறிந்தவர்களும், கற்றவர்களும், அத்துடன் தாங்கள் வேதபிரமாண ங்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பவர்கள் என்று தங்களையே மேன்மை பாராட்டி வந்தவர்கள், ஆனாலும் இவர்களில் பலர் உண்மையிலே சுயநீதியுள்ளவர்களும், உனக்கில்லை உபதேசம் ஊருக்கு என்பது போல வாழ்ந்து வந்தார்கள்.

இயேசு பரிசேயருக்கும் வேதபாரகருக்கும் சொன்ன உவமையையாவது.

உங்களில் ஒரு மனு~ன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளை யும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ?

கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோ~த்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலக த்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டு பிடித்தேன் என்னோடுகூடச் சந்தோ~ப்படுங்கள் என்பான் அல்லவா?

அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமா ன்களைக்குறித்துச் சந்தோ~ம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்தி ரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோ~ம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்கு சொல்கிறேன். (லூக்கா 15:1-10)

இயேசு உலகில் இருந்த நாட்களில் சமுதாயத்தால் வெறுக்கப் பட்டவர்கள், பாவிகள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் பலர் இருந்தார்கள். பாவத்திலே வீழ்ந்து வெளியே வர வழி தெரியாமல் தொலைந் திருந்தார்கள். இயேசுவை ஆர்வமாய் தேடி வந்த பாவிகளுடைய வாழ்க்கை முற்றிலுமாய் மாற்றப்பட்டது. அவர்கள் இயேசுவைக் சந்திக்க முன் செய்த பாவங்கள் யாவும் சரி என்று இயேசு அவர்களுக்கு சொல்லவில்லை, மாறாக அவர்கள் செய்த பாவங்களை அவர்களுக்கு மன்னித்து இனி பாவம் செய்யாதே என்று சொன்னார். அது மட்டுமல்ல தொடர்ந்து பாவமில்லா பரிசுத்த வாழ்வு வாழ்வதற்கான வழியை பணமும் இன்றி விலையும் இன்றி பெற்றுக்கொள்ள வழி வகுத்துக் கொடுத்தார்.

இன்றும் பலவிதமான பாவங்களில் அகப்பட்டிருக்கும் மனிதர்கள் அநே னகர், இக்கட்டான சூழ்நிலைகளில் அறிந்தோ அறியாமலோ சிக்குண்டு தங்கள் வாழ்கையில் நிம்மதி இழந்து, சமுதாயத்திற்கு முகம் கொடுக்க முடியாமல், இப்பிரச்சனைகளிலிருந்து வெளியே வர எனக்கு யாரும் உதவ மாட்டார்களா என அலைந்து திரிகின்றார்கள்.

எப்படியான சூழ்நிலையில் அகப்பட்டிருந்தாலும் நீ தேடும் நிம்மதி இயேசு விடத்தில் உண்டு! இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார். இன்று நீ இந்த வார்த்தைகளை வாசித்தி ருந்தால் உன் இருதயத்தை கடினப்படுத்தாதே. தீர்மானம் எடுப்பது உன் கையில் தான் உண்டு.

இன்று இயேசுவிடம் உன் வாழ்க்கையை ஒப்புக்கொடு.