God's Promises

தேவ வாக்குத்தத்தங்கள்

யோசுவா 21:45 | தேவனுடைய வார்த்தை

Posted on May 11, 2020 15:29

கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.


1 தெசலோனிக்கேயர் 4:3 | தேவ சித்தம்

Posted on May 11, 2020 15:19

நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,


1 பேதுரு 2:16 | ஆராய்ந்து பாருங்கள்

Posted on May 11, 2020 15:10

சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.


யோவான் 3:17 | இரட்சிப்பு

Posted on May 11, 2020 15:05

உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

 


சங்கீதம் 37:34 | சோர்வான நேரங்களில்

Posted on May 11, 2020 15:02

நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.


1 தெசலோனிக்கேயர் 1:7 | கிறிஸ்துவுக்குள் வளர்ச்சி

Posted on May 11, 2020 13:25

இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.


மத்தேயு 5:14 | பக்திவிருத்தி

Posted on May 11, 2020 13:22

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.


ஏசாயா 30:15 | சமாதான வாழ்வு

Posted on May 11, 2020 13:20

நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்;


எபேசியர் 4:3 | ஒருமனம் ஐக்கியம்

Posted on May 11, 2020 13:16

சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.


பிலிப்பியர் 4:2 | ஒருமனம் ஐக்கியம்

Posted on May 11, 2020 13:13

கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.


மாற்கு 3:24 | ஐக்கியத்தின் அவசியம்

Posted on May 11, 2020 13:10

ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.


பிலிப்பியர் 2:2 | ஐக்கியத்தின் அவசியம்

Posted on May 11, 2020 02:47

நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.


எசேக்கியேல் 18:32 | மனந்திரும்புதல்

Posted on May 11, 2020 02:46

மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.


வெளி 2:7 | எச்சரிக்கையுள்ளவர்களாயிருங்கள்

Posted on May 11, 2020 02:43

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்


பிலிப்பியர் 2:16 | கிறிஸ்துவுக்குள் வளர்ச்சி

Posted on May 11, 2020 02:38

எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.


சங்கீதம் 27:13-14 | பொறுமையுள்ளவர்களாயிருங்கள்

Posted on March 28, 2020 14:43

நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன். கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.


சங்கீதம் 27:11-12 | சோர்வான நேரங்களில்

Posted on March 28, 2020 14:40

கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.  என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.


சங்கீதம் 27:10 | தேவனுடைய அன்பு

Posted on March 28, 2020 14:38

என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.


சங்கீதம் 27:6-7 | ஆவிக்குரிய போராட்டம்

Posted on March 28, 2020 14:35

இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன். கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.


சங்கீதம் 27:5 | கர்த்தருடைய பாதுகாப்பு

Posted on March 28, 2020 14:32

தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.


View Older →