புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 21, 2026)

கண்டித்து உணர்த்துபவர்கள்

2 தீமோத்தேயு 4:2

எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்து கொண்டு, புத்திசொல்லு.


வேதவாக்கியங்கள் எல்லாம் பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டிரு க்கின்றது. பரிசுத்த வேதாகமத்திலே, புதிய ஏற்பாட்டிலுள்ள புத்தகங்க ளிலே 21 நிருபங்கள் உண்டு. ஏறாத்தாழ எல்லா நிருபங்களின் ஆரம்ப த்திலும், யார் வழியாக பரிசுத்த ஆவியானவர் வேத வார்த்தைகளை எழுதியிருக்கின்றார் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எபிரெயருக்கு எழுதிய நிருபத்திலே, அதன் ஆசிரியர் யார் என்பது குறிப் பிடப்படவில்லை. அந்த நிருபத்தின் ஆசிரியர் தப்பனுடைய ஆலோசனை களைக் குறித்து எழுதும் போது: தேவன் தாமே பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்கு சொல்லுகிற புத்திமதியை மறந்தீர்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார். எந்த புத்திமதியை மறந்தார்கள்? 'கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த் துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்' என்ற புத்திமதியை மறந்து போனார்கள். தேவ ஊழியராகிய பவுல், கொரிந்து பட்டணத்திலுள்ள சபைக்கு எழுதும் போது: 'கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபா த்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங் களுக்க இல்லையே கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.' என்பதைக் குறித்து கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிருபம் 4ம் அதிகாரத்திலே இருப்பதை, நாம் கடந்த நாட்க ளிலே தியானித்தோம். 'மேய்ப்பர்கள் என்றால் பவுலைப் போல அப்பத் தான் இருக்க வேண்டும். தகப்பபைப் போல கட்டி அணைக்க வேண்டும்' என்று பலதரப்பட்ட வயதிலுள்ள விசுவாசிகள் கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், கொரிந்தியர் 4ம் அதிகாரத்திற்கு முன்பும், அதற்கு பின்னரும், அந்த சபை விசுவாசிகளை எப்படியாக மிகவும் கடிந்து கொண்டார் என்பதை இவர்கள் சிந்திப்பதில்லை. தேவ ஊழியராகிய பவுல் தாமே, அநியாயக்கரனாக இருந்த ஒநேசிமுவை கிறிஸ்துவுக்குள் ஒரு தகப்பனைப் போல வழிநடத்தினார். குறித்த சமய ங்களிலே அவனை எவ்வளவாய் கண்டித்திருப்பார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர் பிலேமோனை நேசித்தார். ஆனால், அவருக்கு நிரு பத்தை எழுதும் போது, அதை சபையோர் அறிய வேண்டும் என்று சபையோர் யாவருக்கும் எழுதியிருக்கின்றார். எனவே பொருளாசையி ல்லாமல், உண்மையாய் பிரயாசம்படும் தேவ ஊழியர்களின் கண்டி தங்களை தயவாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

ஒரு நல்ல தகப்பனைப் போல என்னை தூக்கிச் சுமக்கும் தேவனே, நீர் உம் தாசர்கள் வழியாக என்னை கண்டித்துணர்த்தும் போது, நான் அதை அசட்டை பண்ணாதிருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 16:8