புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 09, 2026)

நித்தியமானவைகளை நாடுங்கள்

எபேசியர் 6:9

அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.


ஆதியிலே தேவன், மனிதனை தம்முடைய சாயலாகவும் ரூபமாகவும் உருவாக்கினார். அவர்கள் பாவம் செய்த போது, இந்த உலகத்திலே ஏற்றத்தாழ்வுகளும் உண்டாயிற்று. சிலர் அரச மாளிகைகளிலும், வேறு சிலர் ஏழைக் குடிகளிலும் பிறக்கின்றார்கள். சிலர் ஐசுவரியவான்க ளாவும், வேறு சிலர் ஏழைகளாவும் வாழ்கின்றார்கள். 'ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை' 'ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்தி க்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.' இவர்கள் முடிவு ஒன்றாயிருக்கும். இவர்கள் கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் நடந்தால் அத னால் உண்டாகும் பலனை அடை வார்கள். கீழ்படியாதவர்கள் அதற் குரிய பின்விளைவுகளை சந்திப் பார்கள். தேவனிடத்தில் பட்சபாதம் இல்லை. இவர்களுடைய நடக்கைக ளைக் குறித்து வேதம் கூறும் ஆலோசனை என்ன? 'வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து. மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரு ம்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யு ங்கள். அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவா னென்று அறிந்து, மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக் கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். எஜமான்களே, அப்ப டியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.' பிரியமான சகோதர சகோத ரிகளே, அந்த உலகத்தில் உங்கள் நிலைகள் அநித்தியமானவைகள், நித்தியமானவைகளைக்கு என்று அழைக்கப்பட்ட நீங்களோ, அழை ப்பின் மேன்மையை உணர்ந்தவர்களாக, ஜீவ கிரீடத்தை பெற்றுக் கொள்ளும்படிக்கு, தேவனுக்கு பயந்து அவர் வழியிலே நடவுங்கள். உங்கள் எஜமானனாகிய இயேசு கிறிஸ்து மகிமையிலே வெளிப்படும் நாளிலே, மிகுந்த பலனை பெற்றுக் கொள்வீர்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தகப்பனே, அழிந்து போகும் இந்த உலக வாழ்வைக் குறித்து நான் கவலையடையாமலும், இந்த உலகம் தரும் மேன் மைகளை பற்றிக் கொள்ளாதபடிக்கும் உம் வார்த்தையின் வழியிலே வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:18