தியானம் (கார்த்திகை 02, 2026)
நாளுக்குள் நாள் புதிதாக்கப்படுதல்...
1 கொரிந்தியர் 15:19
இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால் எல்லா, மனுஷரைப்பார்க்கிலும் பரி தபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனொருவனுக்கு அந்த அயலிலே வாழ்ந்த விசுவாச கும்பத்தினர் அவ்வப்போது நன்மை செய்து வந்தார்கள். ஆனால், சில ஆண்டுகள் சென்ற பின்பு, அந்த மனிதனோ, அந்த விசுவாச குடும்பத்தினரு க்கு மீள முடியாத மகா பெரும் துரோகத்தை விளைவித்தான். அந்த மனிதனுக்கு அவன் செய்த அநியாயத்தின்படி சரிக்கட்டுவத ற்கு அந்த விசுவாச குடும்பத்தினருக்கு பெலனிருந்தும், கிறிஸ் துக்காக அதை சகித்து கொண்டு, பாவம் செய்யாதபடிக்கு விசுவாசத்திலே உறுதியாய் இருந்து வந் தார்கள். அவர்களுக்கு நன்நடக்கையை கண்டு, சபையோர் தேவனை ஸ்தோத்தரித்தார்கள். அநேகருக்கு சாட்சியாக இருந்து முன்னேறிச் சென் றார்கள். ஊழியங்களையும், பற்பல நற்கரியைகளையும் ஆண்டுகளாக செய்து வந்தார்கள். இதைவிட விசுவாசிகளிடமிருந்து என்னத்தை எதிர்பார்க்க முடியும்? நன்மைக் தீமை செய்தவனை இனி காணக்கூடாது என்ற எண்ணணும், நடந்த சம்பவங்களைக் குறித்த கசப்பும் இருதயத்தின் ஆடி ஆழத்திலே இருந்து வந்தது. அநேக ஆண்டுகள் சென்ற பின்பு, தேவனாகிய கர்த்தர்தாமே அவர்களோடு பேசினார். முதலாவதாக: பெருந்தீமை செய்த மனிதனை மன்னித்து விடும்படியாகவும் இரண்டாவதாக: அவனை ஆசிர்வதிக்கும்படியாவும், மூன்றாவதாக: அவனுடைய இரட்சிப்புக்காக ஜெபம் செய்யும்படியாவும் அவர்களுக்கு உணர்த்தினார். கேட்பதற்கு மிக கடினமானதும், நடைமு றைப்படுத்தவதற்கு மனித பெலத்திற்கு அப்பாற்பட்ட காரியமாகவும் இருந்தது. ஆனாலும், தேவ ஆவியாவரின் பெலத்தோடுஅதை அவர்கள் தங்கள் நடைமுறைப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆரம்பத்தில் அதை வாய்மொழியாக செய்தார்கள். அவர்கள் உண்மையாக அதை செய்தார்களா என்று அவர்கள் அறிந்து கொள்ளும்படி, தேவனானவர் சில சூழ்நிலைகளை அவர்களுடைய வாழ்விலே அனுமதித்தார். தம் முடைய பிள்ளைகளின் இருதயம் தம்மைப் போல மாறும்படி அவர் களை வழிநடத்தி அந்தக் காரியத்தை அவர்கள் வாழ்விலே நிறை வேற்றி முடித்தார். அருமையான சகோதர சகோதரிகளே, விசுவாசம் என்பது, கற்க கடினமாக பாடங்களில் சித்தி பெறுவதும், பெரிய கம்பனி களில் வேலை பெறுவதற்கும் அல்ல. மாறாக, கிறிஸ்து தம்முடைவர் களில் வெளிப்பட வேண்டும்.
ஜெபம்:
நித்திய கனமகிமைக்கு என்று என்னை அழைத்த தேவனே, இந்த உலகத்தின் காரியங்களுக்கு மட்டுமல்ல, நித்திய வாழ்வை பெறும் நோக்கத்தோடு உம்மை பற்றிக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கொலோ 3:13