புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 30, 2026)

கிரயம் கொடுத்தல்

1 யோவான் 2:1

ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.


'தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.' (ரோமர் 8:33-34). அதாவது, மீட்ப ராகிய கிறிஸ்து இயேசுதாமே நம்மு டைய பாவங்களை தம்முடைய கண க்கில் போடுகின்றார். 'நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.' (1 யோவான் 1:9). கிறிஸ்துவுக்குள் அருமையான சகோதர சகோதரிகளே, நாம் கிறிஸ்துவின் சாயலிலே விருத்தியடையும்படிக்கு அழைப்பை பெற்றிருக்கின்றோம். அவர் நமக்காக பரிந்து பேசுவதைப்போல நாமும் மற்றவர்களுக்காக பரிந்துபேசி ஜெபிக்க வேண்டும். அத்தோடு நின்றுவிடாமல், ஒருவனை விடுதலையாக்க திராணியிருக்குமாயின் அதை நடப்பிக்க வேண்டும். 'ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.' சில வேளைகளிலே கிறிஸ்துவை போல நாமும் கிரயம் கொடுக்க வேண்டும். தேவ ஊழியராகிய பவுல்தாமே பிலமோ னிடம் ஒநேசிமுவுக்காக பரிந்து பேசும் போது: 'ஆதலால், அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும். பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்ப்பேன்.' என்று எழுதியிருக்கின்றார். கிறிஸ்துவைப் போல, ஒநேசிமுவின் குறைகளை தன் கணக்கில் ஏற்றுக் கொண்டார். அநியாம் செய்கின்றவர்கய் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தண்டனைதான் அவர்களின் முடிவு என்று இருக்காமல், நன்மையை நடப்பிக்க முடியுமானால் நடப்பியுங்கள். தேவன் உங்கள்மேல் காட்டிய இரக்கத்தை நீங்கள் மற்றவர்கள்மேல் காண்பியுங்கள். நான் என்னும் பெருமையன எண்ணம் குறையவும், கிறிஸ்து எங்களில் பெருகவும் வேண்டடும். பரிந்து பேசி மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

ஜெபம்:

அன்பின் தேவனே, உம்முடைய திருக்குமாரனாகிய இயேசு எனக்காக பரிந்து பேசுவதுபோல நானும் எனக்கெதிராக குற்றம் செய்தவர்களுக்காக ஜெபம் உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 7:25