தியானம் (ஐப்பசி 29, 2026)
இடறல்கள் உண்டுபண்ண வேண்டாம்
ரோமர் 16:17
அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர் களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த வாலிபன் ஒருவன் தன் சொந்த வீட்டிற்கு எதிராக துரோகம் செய்துவிட்டான். அந்த ஊரிலே வாழ்ந்து வந்த சிலர், அவனுக் நல்ல ஆலோசனையை வழங்குவற்கு பதிலாக, அவன் செய்கையை தங்கள் சுய இலாபத்திற்காக ஆதரித்தார்கள். வாழ்வின் தார்பரியங்களை அறியாத அந்த வாலிபனின் செய்கைகள் பிற்காலத்திலே பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிந்திருந்தும், அவன் பிரிந்திருப்பதற்கு ஆதரவு வழங்கினார்கள். ஆண்டுகள் கடந்து சென்ற பின்பும், தங்கள் தவறான ஆலோசனைகள் வெளிப்படும் என்று பயத்தினாலே, சமாதனாத்திற்கேதுவானவைகளை நடப்பிக்க தயக்கமுள்ளவர்களாக இருந்துவந்தார்கள். வாலிபனோ, தான் செய்வது சரி, தன்னுடைய வழி நியாயம் என்று அந்த வழியிலே நடந்து நெடுந்தூரம் சென்று விட்டான். காலங்கள் கடந்து சென்றதும் அவனவன் தன் தன் வழியிலே சென்றுவிட்டான். ஆனால், அவனனவன் விதைத்தை அறுக்கும் காலம் வரும் என்பதை அவர்கள் உணராதிருந்தார்கள். கிறிஸ்துவுக்குள் அருமையான சகோதர சகோதரிகளே, ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய் நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை. துராலோசனை யைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே. (நீதிமொழிகள் 6:16-19). எனவே தேவனுடையவர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்கின்றர்கள் இந்த கர்த்தர் வெறுக்கின்ற காரியங்களை குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். மற்றவர்களுடைய வாழ்விலே இடறல் உண்டு பண்ணுவது பெரிதான பின்விளைவுகளை உண்டு பண்ணும். எனவே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து, முதலாவது அவர்களின் கண்ணிக்குள் நிங்கள் அகப்படாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். அவர்களோடு எந்தக் காரியத்திலும் பங்கேற்காமல் அவர்களை விட்டு விலகுங்கள்.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, உம்மு டைய வார்த்தைக்கு விரோதமான எந்தக் காரியத்திற்கும் நான் உடன்படாதபடிக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்து, நேரிய பாதையிலே கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 18:6