புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 18, 2026)

மன்னிக்கும் மனநிலை

மத்தேயு 5:48

ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.


'நான் அல்ல அவனே குற்றம் செய்தவன். அவன் மனந்திரும்பி மன்னிப்புக் கேட்டால், அவனை மன்னிப்பேன்' என்று ஒரு விசுவாசியாவன் கூறிக் கொண்டான். இந்த விசுவாசியானவனின் கூற்றிலே உண்மையும் அதே வேளையிலே மனக்கடினமும் உண்டு. அதாவது, மன்னிப்பை பெற் றுக் கொள்ளுதலுக்கு மனந்திரும்புதல் அவசியம். குற்றம் செய்த ஒருவன் தன்னுடைய குற்றத்தை உணராமல், கடமைக்காக மன்னிப்பு கேட்பது வெளிவேடம். அதனால், அவன் ஆத்துமாவிற்கு பலன் இல்லை. அதில் உண்மை உண்டு. ஆனால், மேற்கூறிய சம்பத்திலுள்ள விசுவாசியாவன், தன் உடன் சகோத ரன் மனந்திரும்ப வேண்டும். அவன் தன் அநியாயத்திலே அழிந்து போய் விடக்கூடாது. அவனோடு நான் ஒப்பு ரவாக வேண்டும் என்ற மனநிலை யில்லாதவனாக, அவன் மனந்திரு ம்பினால் மன்னிப்பு, இல்லையென்றால் அவனுக்கு தண்டனை என்ற கடின உள்ளம் உடையவனாக இருந்தான். இந்த சந்தர்பத்திலே, தேவ னுடைய பார்வையிலே, இரண்டு பேருக்கும் மனமாற்றம் அவசியமாக இருக்கின்றது. கெட்ட குமாரன், தன் ஆஸ்தியை சேர்த்துக் கொண்டு, தன் தகப்பன் வீட்டைவிட்டு, தூர தேசத்திற்கு சென்று, துன்மார்க்கமாய் வாழ்ந்து தனக்குண்டான எல்லாவற்றையும் அழித்துப் போட்டான். அவன் மனந்திரும்பி வீட்டிற்கு வருவதைக் தூரத்தில் கண்ட அவனுடைய தக ப்பனானவர் மனதுருகி, ஓடிச் சென்று, அவன் தன் பாவ அறிக்கையை செய்ய முன்னதாகவே, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனை முத்தஞ் செய்தார். இப்படிப்பட்ட மனநிலையிலே விசுவாசிகள் வளர வேண்டும். இதுவே பிதாவாகிய தேவனின் மனநிலை. அவர் நம்மை தண் டிக்க காத்திருக்காமல், நாம் வாழ்வடைய வேண்டும் என்று காத்திருக் கின்றார். தகப்பனோடு இருந்து தன் வேலைகளை ஒழுங்காக கவனித்து வந்த மூத்தகுமாரனோ, தன் இளைய சகோதரனின் மனந்திரும்புதலை ஏற்றுக் கொள்ளாமல், மனக் கசப்போடு இருந்தான். தகப்பனானவரோ, அவனும் தன்னைப் போல வளரவேண்டும் என்று அவனுக்கு நல்ல அறிவுரையை கூறினார். எனவே நித்திய ஜீவனுக்கென்று அழைப்பை பெற்ற அருமையான சகோதர சகோதரிகளே, உங்கள் பரமபிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருங்கள். நாளுக்கு நாள் இந்த திவ்விய சுபவாத்திலே வளருங்கள்.

ஜெபம்:

உம் கிருபையினாலே என்னை வேறுபிரித்த தேவனேஇ சுய நீதி, உலக நியாயங்களை களைந்துவிட்டு, நான் திவ்விய சுபாவத்திற்கு பங்குள்ளவனாக மாறும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிந டத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:32

Category Tags: